இலங்கை செய்தி

ராணுவ விவகாரங்களில் குறித்து பாதுகாப்பு செயலாளர் யாழில் ஆராய்வு

பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த வடக்கிற்கு நேற்று பயணம் மேற்கொண்டு, பலாலியில் உள்ள யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன மற்றும் வட பிராந்தியத்தில் பணியாற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளுடன் இந்த கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன மற்றும் வட பிராந்தியத்தில் பணியாற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளுடன் இந்த கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இந்தச் சந்திப்பின் போது, ​​வட பிராந்தியத்தில் இராணுவத்தின் இருப்பு தொடர்பான நடவடிக்கை மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்து பாதுகாப்புச் செயலர் மீளாய்வு செய்தார்.

குறிப்பாக, மூலோபாயத் தேவைகள், தளபாட ஏற்பாடுகள், படையினரின் நலன் மற்றும் பிற முக்கிய இராணுவ முன்னுரிமைகள் குறித்து அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

மேலும், வடக்குப் பிராந்தியத்தில் பாதுகாப்புப் படைகளின் வினைத்திறனான செயற்பாட்டை உறுதிப்படுத்துதல், தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்தல், செயற் திறனை மேம்படுத்துவதற்கு மேலதிக கவனம் தேவைப்படும் பகுதிகளை இனங்காணுதல், காணி தொடர்பான சிக்கல்கள் மற்றும் நிறுவன ரீதியான தயார்நிலை போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

பாதுகாப்புச் செயலர் மூத்த இராணுவத் தலைவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, பாதுகாப்பு சார்ந்த முக்கிய தேவைகளை மதிப்பீடு செய்ததுடன், பிராந்திய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து விரிவான புரிதலைப் பெற்றுக்கொண்டார்.

வடக்கின் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கை மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்கான கள பயணத்தின் ஒரு பகுதியாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் இணைந்து பலாலியில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கும் சென்றார்.

அங்கு அவர், மருத்துவமனையில் அமைக்கப்படவுள்ள புதிய கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டதுடன், அதன் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்தார்.

வளாவிளானில் பொதுமக்களின் காணிகளில், உரிய அனுமதிகளின்றி அமைக்கப்பட்டு வரும் இராணுவ மருத்துவமனைக்கு எதிராக பொதுமக்கள் பல வாரங்களாக போராடி வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை