பாதுகாப்பு அச்சுறுத்தல் – லிதுவேனியாவில் களமிறக்கப்படும் ஜெர்மனியின் இராணுவ வீரர்கள்
2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள், நேட்டோவின் கிழக்கு எல்லையைப் பாதுகாக்க உதவும் வகையில், பெலாரஸ் எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிதுவேனியாவில் சுமார் 5,000 ஜெர்மானிய வீரர்கள் நிரந்தரமாக நிலைநிறுத்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள லிதுவேனியாவின் வெளியுறவு அமைச்சர் கெஸ்டுடிஸ் புட்ரிஸ் ( Kęstutis Budrys) , பெலாரஸிலிருந்து சில தன்னிச்சையான நடவடிக்கைகள் வருவதாகவும், அவை பெரும்பாலும் லித்துவேனியாவுக்கு எதிரான கலப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்றும் கூறினார். அத்துடன் ரஷ்யாவின் விரிவாக்கத்தை நாங்கள் […]



