போராட்டத்தில் பங்கேற்க ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுத்த இம்ரான் கானின் கட்சித் தலைவர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் ஒருவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை தனது போராட்டங்களில் சேர “அழைக்க” திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்தார்.
அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் (SCO-CHG) கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆளும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் முதலமைச்சரின் தகவல் ஆலோசகரான முஹம்மது அலி சைஃப், ஓர் நிகழ்ச்சியில் பேசும் போது, நடைபெற்று வரும் போராட்டங்களில் பங்கேற்குமாறு ஜெய்சங்கரை அழைத்தார்.
“இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, பிடிஐ-யின் போராட்டத்தில் கலந்துகொள்ள வருமாறும், நமது மக்களிடம் பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரும், முக்கிய ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) தலைவருமான அத்தாவுல்லா தரார், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு சைஃப் விடுத்த அழைப்பு “மிகவும் பொறுப்பற்றது” மற்றும் “பகைமைக்கு சமம்” என்று கடுமையாக பதிலளித்தார்.