இலங்கை செய்தி

குட்டிமணி, தங்கத்துரை சிலை திறப்பு விழா: ஏற்பாட்டாளர் கைது

வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ், நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 25 ஆம் திகதி மேற்படி உருவச்சிலைகளைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது, ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஸ், பொலிஸாரால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து, விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் அவர், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை நீதிவான் பிணையில் விடுவித்து நாளை புதன்கிழமை வரை வழக்கை ஒத்திவைத்தார். அதேவேளை, நாளை வரை உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகளுக்கும் நீதிவான் தடை விதித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை