உலகம்

குவாத்தமாலாவில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து – 15 பேர் பலி!

  • December 27, 2025
  • 0 Comments

குவாத்தமாலாவில் (Guatemala) உள்ள இன்டர்-அமெரிக்கன்  (Inter-American) நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் 19 பேர் காயமடைந்துள்ள நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். அதிக பனிப்பொழிவினால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

ஐரோப்பா

இங்கிலாந்தில் மகப்பேறு செவிலியிர்களின் வேலைநேரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை!

  • December 27, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் மகப்பேறு செவிலியர்களின் வேலை நேரங்களுக்கு சட்டப்பூர்வ கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் 14,000 க்கும் மேற்பட்டோர் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் ஆபத்தான நீண்ட ஷிப்டுகளில் (shifts) வேலை செய்வதாக தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் 24 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்வதாகவும், இது மனசோர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். ஜெனிஃபர் காஹில்லின் ( Jennifer Cahill) என்ற மருத்துவ பணியாளர் 30 மணிநேரம் வேலை செய்ததை தொடர்ந்து உயிரிழந்திருந்தார். இந்த விடயம் அவரது பிரேத […]

இலங்கை செய்தி

பூஸா சிறைக்குள் நடப்பது என்ன? தரைக்குள் இருந்து 15 தொலைபேசிகள் மீட்பு!

  • December 27, 2025
  • 0 Comments

பாதாள குழு உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா சிறைச்சாலையிலிருந்து இன்றும் (27) 15 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. பூஸா சிறைச்சாலையானது அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையாகக் கருதப்படுகின்றது.எனினும், அங்கு தொலைபேசி பயன்படுத்தப்படுவதாக உளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்து கடந்த சில நாட்களாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறைச்சாலைக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுவருகின்றது. இதற்கமைய பாதாள குழு உறுப்பினர்களான பொடி லெசி , தெமட்டகொட சமிந்த, மிதிகம ருவான் உள்ளிட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறைகளில் இருந்தும் தொலைபேசிகள் […]

உலகம் செய்தி

கபாதியா கிராமத்தில் பலஸ்தீனிய குடும்பங்களை இடமாற்றம் செய்த இஸ்ரேலிய படைகள்

  • December 27, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில், வடக்கு இஸ்ரேலில் உள்ள கபாதியா கிராமத்தில் படைகள் பெருமளவானோரை கைது செய்து, பல குடும்பங்களை அவர்களது வீடுகளிலிருந்து இடமாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய படைகள் கிராம நுழைவாயில்களை மூடி, சில வீடுகளை விசாரணை மையங்களாக மாற்றி, அந்த இடங்களில் வசிப்பவர்களை இடம்மாற்றம் செய்தாக கூறப்படுகிறது. இதேவேளை, கபாதியாவில் நடந்த கத்திக்குத்து மற்றும் கார்-மோதல் தாக்குதல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு, அதற்குப் பதிலாக நடவடிக்கை […]

உலகம் செய்தி

சோமாலிலாந்தை அங்கீகரித்த இஸ்ரேல் – மீளப்பெறுமாறு கோரும் சோமாலியா

  • December 27, 2025
  • 0 Comments

இஸ்ரேல் சோமாலிலாந்தை அங்கீகரித்ததை மீளப் பெறுமாறு சோமாலியா கோரியுள்ளது. சோமாலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி ஒமர், இந்த நடவடிக்கையை “ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாத ஆக்கிரமிப்பு” எனக் கண்டித்துள்ளார். அரசாங்கம் அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்தி இதனை சவால் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். சோமாலிலாந்தை முறையாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல் செயல்பட்டது. இதன் பிறகு ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை பலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் இஸ்ரேலிய […]

ஐரோப்பா செய்தி

சமிஞ்சை ஊழியர்கள் பற்றாக்குறை – இங்கிலாந்தில் ரயில் சேவைகள் பாதிப்பு

  • December 27, 2025
  • 0 Comments

சமிஞ்சை ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தென்மேற்கு இங்கிலாந்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையால் எக்ஸெட்டரிலிருந்து (Exeter) எக்ஸ்மவுத் (Exmouth), யோவில் (Yeovil) சந்தி மற்றும் பேசிங்ஸ்டோக் (Basingstoke) வரையிலான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. எக்ஸெட்டர் சென்ட்ரல் மற்றும் எக்ஸ்மவுத், எக்ஸெட்டர் மற்றும் ஹொனிடன் இடையேயான ரயில் பாதைகள் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ஏனைய ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

anirudh-andrea-malaysia-concert-chemistry-viral-video-details பொழுதுபோக்கு

அனிருத் – ஆண்ட்ரியா: மலேசியா மேடையில் மீண்டும் ஒரு மேஜிக்!

  • December 27, 2025
  • 0 Comments

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் புக்கிட் ஜலில் (Bukit Jalil) தேசிய மைதானத்தில் இன்று (டிசம்பர் 27) மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அனிருத் தனது இசைக்குழுவுடன் நேரலை கச்சேரி நடத்தினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக, நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமையா மேடைக்கு வந்து அனிருத்துடன் இணைந்து சில பாடல்களைப் பாடினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒரே மேடையில் நேரலையாகப் பெர்ஃபார்ம் செய்தது […]

ஐரோப்பா செய்தி

IRIS-T வான் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு வழங்கும் ஜெர்மனி!

  • December 27, 2025
  • 0 Comments

சர்வதேச ஆதரவுடன் உக்ரைன் தனது வான் பாதுகாப்பு வலையமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி நேற்று ஒன்பதாவது IRIS-T வான் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு  வழங்கியுள்ளது. IRIS-T ஏவுகணை அமைப்பானது 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் ஜெர்மனி தலைமையிலான திட்டத்தால் உருவாக்கப்பட்டது. விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தற்போது IRIS-T ஏவுகணை அமைப்பின் இரண்டு வகைகளை பயன்படுத்துகிறது.  ஒன்று 12 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் […]

இந்தியா செய்தி

டெல்லியில் தேடுதல் வேட்டை – 285 பேர் கைது

  • December 27, 2025
  • 0 Comments

இந்தியாவின் டெல்லியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், டெல்லி பொலிஸார் ‘ஆகாத்’ நடவடிக்கை என்ற பெயரில் நேற்று இரவு விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு டெல்லி பொலிஸாரால் ‘ஆகாத் 3.0’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய […]

ஐரோப்பா செய்தி

வரலாற்றுச் சிறப்பு மிக்க பேயக்ஸ் திரைச்சீலை – £800 மில்லியன் காப்பீடு வழங்க பிரித்தானிய கருவூலம் தீர்மானம்

  • December 27, 2025
  • 0 Comments

பேயக்ஸ் (Bayeux) திரைச்சீலைக்கு, சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் அதனை பாதுகாப்பாக £800 மில்லியன் மதிப்பிலான காப்பீடு வழங்க பிரித்தானிய கருவூலம் தீர்மானித்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கலைப்படைப்பான பேயக்ஸ் திரைச்சீலை அடுத்த ஆண்டு பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. 1066 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹேஸ்டிங்ஸ் போரை சித்தரிக்கும், சுமார் 70 மீற்றர் நீளமுள்ள, துணியில் தையல் மேற்கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கலைப்படைப்பு இதுவாகும். இந்த கலைப்பொருள், இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் […]