இலங்கை செய்தி

பூஸா சிறைக்குள் நடப்பது என்ன? தரைக்குள் இருந்து 15 தொலைபேசிகள் மீட்பு!

பாதாள குழு உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா சிறைச்சாலையிலிருந்து இன்றும் (27) 15 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

பூஸா சிறைச்சாலையானது அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையாகக் கருதப்படுகின்றது.எனினும், அங்கு தொலைபேசி பயன்படுத்தப்படுவதாக உளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறைச்சாலைக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுவருகின்றது.

இதற்கமைய பாதாள குழு உறுப்பினர்களான பொடி லெசி , தெமட்டகொட சமிந்த, மிதிகம ருவான் உள்ளிட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறைகளில் இருந்தும் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

தரையை நோண்டியும் ஏனைய சில பகுதிகளிலும் இவை மிகவும் சூட்சுமமான முறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு சிறைச்சாலை அறைகள் பல சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

டேட்டா கேபல், பவர் பேங், சிம் அட்டைகள் , சிக்னல் பூஸ்டர் உட்பட மேலும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பூஸா சிறைச்சாலையில் உள்ள சில அதிகாரிகள், குற்றவாளிகளுக்கு உதவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை