அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 9 ஆம் திகதி முதல் இழப்பீடு!

  • January 7, 2026
  • 0 Comments

“அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை […]

உலகம்

இஸ்ரேலுக்காக பணியாற்றிய நபரை தூக்கிலிட்ட ஈரான்!

  • January 7, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் மொசாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில்  நபர் ஒருவரை  தூக்கிலிட்டதாக ஈரான் அரசு தரப்பினர் இன்று அறிவித்துள்ளனர். அலி அர்டெஸ்டானி (Ali Ardestani) என்ற நபரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொசாட் அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியமைக்காக கிரிப்டோகரன்சி வடிவில் அவர் நிதி வெகுமதிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த நபர் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும், தகவல்களை வழங்கிமைக்கு பிரதியீடாக நிதி வெகுமதிகள் உட்பட பிரித்தானிய விசாவை பெறுவார் என நம்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

விக்டோரியாவில் குற்றங்கள் வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு

  • January 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கடந்த 12 மாதங்களில் குற்றச் சம்பவங்கள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாகக் குற்றப் புள்ளியியல் நிறுவனம் (CSA) எச்சரித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் சுமார் 6 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, கார் திருட்டு மற்றும் சொத்து தொடர்பான மோசடிகள் கடந்த ஆண்டை விட 14.2 சதவீதம் அதிகரித்துள்ளன. கார் திருட்டுகளைப் பொறுத்தவரை 37,000-லிருந்து சுமார் 2 இலட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளமை பொதுமக்களிடையே பெரும் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

வடக்கு குயின்ஸ்லாந்தில் வரலாறு காணாத வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • January 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் பெய்து வரும் கனமழையினால் நதிகளின் நீர்மட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ள நிலையில், கால்நடைப் பண்ணைகளில் இருந்து சுமார் 16,450 பசுக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டோ அல்லது காணாமலோ போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டிம்புலா (Dimbulah) பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய ஒருவர் காரிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால், […]

ஐரோப்பா செய்தி

சிறுவனுக்குப் பணம் கொடுத்து பாலியல் உறவு கொண்ட அதிகாரி பணிநீக்கம்

  • January 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் மெர்சிசைட் (Merseyside) காவல்துறை அதிகாரி ஜான் ரிக்பி (John Rigby), 17 வயது சிறுவன் ஒருவனுக்குப் பணம் கொடுத்து பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2025 பெப்ரவரி மாதம் முதல் அந்தச் சிறுவன் மைனர் என்று தெரிந்தே இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இது தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காகக் காவல்துறை கணினியில் தரவுகளைத் திருடிய குற்றச்சாட்டும் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் ‘பௌடிக்கா’ காலத்து அரிய போர் எக்காளம் கண்டெடுப்பு

  • January 7, 2026
  • 0 Comments

பிரிட்டனின் நார்ஃபோக் (Norfolk) பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான, மிகவும் அரிதான ‘கார்னிக்ஸ்’ (Carnyx) எனும் போர் எக்காளத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். காட்டு விலங்கின் தலை வடிவில் வெண்கலத்தால் ஆன இந்த எக்காளம், போர்க்களத்தில் எதிரிகளை அச்சமூட்ட பயன்படுத்தப்பட்டது. இது கி.பி. முதலாம் நூற்றாண்டில் ரோமானியர்களை எதிர்த்துப் போரிட்ட ராணி பௌடிக்காவின் ‘ஐசினி’ (Boudicca – Iceni) பழங்குடியினருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. உலகிலேயே மிக முழுமையான நிலையில் கிடைத்துள்ள இந்த அபூர்வ கண்டுபிடிப்பு, […]

இலங்கை

கணேமுல்ல கொலை வழக்கு – இரு குற்றவாளிகளுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

  • January 7, 2026
  • 0 Comments

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் முதன்மை சந்தேக நபரான இஷார செவ்வந்திக்கு உடந்தையாக இருந்ததாகவும், அவருக்கு தங்குமிடம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நந்தகுமார், தக்ஷி ஆகியோரை  விளக்கமறியளில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும்  இன்று (07)  கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது  முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட […]

ஐரோப்பா

அமெரிக்காவின் பிடியில் ரஷ்ய எண்ணெய் கப்பல் – அதிகரிக்கும் பதற்றம்!

  • January 7, 2026
  • 0 Comments

வெனிசுலாவிற்குள் நுழைந்து வெளியேறும் எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடிப்போம் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் கப்பல் ஒன்று அப்பகுதியில் பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் படைகளால் துரத்தப்பட்டுள்ள மரைனேரா எண்ணெய் டேங்கர் கப்பலை அழைத்துச் செல்வதற்காக ரஷ்யாவின் பெல்லா 1 என்ற கப்பல் அந்த பகுதியில் பயணிப்பதாக கூறப்படுகிறது. இந்த கப்பல் வழக்கமாக வெனிசுலாவில் இருந்து ரஷ்யாவிற்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்லும். தற்போது குறித்த கப்பலானது ஸ்காட்லாந்துக்கும் ஐஸ்லாந்திற்கும் இடையில் இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை–ஜேர்மனி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க கடன் ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

  • January 7, 2026
  • 0 Comments

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுடன் இன்று புதிய இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. நிதி அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 188 மில்லியன் யூரோ பெறுமதியான கடனை மறுசீரமைப்பதற்கான ஆவணங்களில் இலங்கை அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜேர்மனி சார்பில் சாரா ஹெசல்பாத் (Sarah Hasselbarth) ஆகியோர் கையெழுத்திட்டனர். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான (OCC) இணக்கப்பாட்டைத் தொடர்ந்து எட்டப்பட்டுள்ள […]