தமிழ்நாடு பொழுதுபோக்கு

அரசியல் புயலில் சிக்கிய “ஜனநாயகன்”!

  • January 8, 2026
  • 0 Comments

நடிகர் விஜய் அரசியல் களம் புகுந்துள்ள நிலையில், அவர் நடித்துள்ள கடைசி படம் அரசியல் புயலில் சிக்கியுள்ளது. தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (9) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த படத்தை மறுஆய்வுக் குழு பார்ப்பதாக தணிக்கை குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை […]

உலகம்

அமெரிக்காவின் பொருட்களை மட்டுமே வெனிசுலா கொள்வனவு செய்ய வேண்டும் – ட்ரம்ப் கட்டளை!

  • January 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட” பொருட்களை மட்டுமே வெனிசுலா கொள்வனவு செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமெரிக்காவுடனான தனது புதிய எண்ணெய் ஒப்பந்தத்தின் நிதியைப் பயன்படுத்தி “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட” பொருட்களை மட்டுமே வெனிசுலா கொள்வனவு செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் அறிவிப்பின்படி பார்க்கும்போது, அமெரிக்க விவசாய பொருட்கள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், வெனிசுலாவின் மின்சார கட்டம் மற்றும் எரிசக்தி வசதிகளுக்கான […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில், சஜித் இணைந்தால் வெற்றி நிச்சயம்: நவீன் நம்பிக்கை

  • January 8, 2026
  • 0 Comments

“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச ஏற்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலில் இட ஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம். முகாமைத்துவ குழவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். […]

இலங்கை செய்தி

பேரிடரால் வீடுகளை இழந்தோருக்கு வீடு அமைக்கும் பணி நாளை ஆரம்பம்!

  • January 8, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகின்றது. ரீ பில்டிங் ஸ்ரீலங்கா ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். இதற்கமைய டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு […]

ஐரோப்பா

புட்டினை தடுக்க வேண்டுமானால் ஐரோப்பிய நாடுகள் இராணுவ திறனை மேம்படுத்த வேண்டும்!!

  • January 8, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தடுக்க அல்லது கையாள தங்கள் இராணுவத் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் இராணுவத் தலைவர் சர் ஜாக் ஸ்டிரப் (Sir Jock Stirrup) வெளியிட்டுள்ள கொள்கை மாற்றத்திற்கான அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இங்கிலாந்தின் “காலாவதியான அணுசக்தி கோட்பாட்டை” விமர்சிக்கிறது.  அத்துடன் அணுசக்தி கூறுகளுடன் பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளையும் பரிந்துரைத்துள்ளது. பிரதமர் கெய்ர் […]

இந்தியா செய்தி

இந்தியர்களுக்கான தூதரக சேவையை இடைநிறுத்தியது பங்களாதேஷ்: டெல்லியில் 25 பேர் கைது!

  • January 8, 2026
  • 0 Comments

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை இடைநிறுத்தும் முடிவை பங்களாதேஷ் எடுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்தாடுகின்றது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள விவகாரம் இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர மோதலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே டெல்லி , கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் பங்களாதேஷ் தூதரகங்கள் ஊடாக வழங்கப்படும் […]

இலங்கை

பொத்துவில் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – மீனவர்களின் கவனத்திற்கு!

  • January 8, 2026
  • 0 Comments

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (08) காலை ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. குறித்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில்  நிலைகொண்டுள்ளது. மேலும் அடுத்த சில மணி நேரத்தில் கிழக்கு கடற்கரையை அடையும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் ஒரு சில பகுதிகளில்  100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். அதேநேரம் நாடு […]

ஐரோப்பா

மரினேரா கப்பல் கைப்பற்றப்பட்ட விவகாரம் : ரஷ்யா கடும் எச்சரிக்கை!

  • January 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறியதாக குற்றம் சாட்டி ரஷ்யாவின் கொடியுடன் பறந்த மரினேரா (Marinera) எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்க படைகள் சிறைப் பிடித்துள்ள நிலையில், ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த நடவடிக்கைக்கு பிரித்தானியாவின் வான்படைகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் உலகளாவிய பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சகம், இந்த பறிமுதல் சர்வதேச கடல்சார் சட்டத்தை மீறுவதாகக் கூறியது. கிரெம்ளின் ஆலோசகர் அமெரிக்க-ரஷ்ய உறவுகளில் ‘நெருக்கடி நிலைமை’ ஏற்படக்கூடும் என்றும்  எச்சரித்தார். அமெரிக்கப் படைகள் வெனிசுலாவிற்குள் […]

அரசியல் இலங்கை செய்தி

ஐ.நா. அமைதி படைக்கு அதிகமானவர்களை அனுப்புவது குறித்து இலங்கை ஆராய்வு!

  • January 8, 2026
  • 0 Comments

ஐ.நா. அமைதிப் படைகளுக்கு அதிகமானவர்களை அனுப்புதல் மற்றும் ஹெலிகொப்டர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் திறப்பது மற்றும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக […]

உலகம்

டெக்ஸாஸில் வீடு வீடாக விநியோகிக்கப்படும் மர்மப் பொட்டலங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

  • January 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலங்களில் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்கப்படும் தபால் பொதிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விநியோகிக்கப்படும் பொதிகளில் வரும்  விதைப் பொட்டலங்களை திறக்க வேண்டாம் என அதிகாரிகள் குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். டெக்சாஸ் வேளாண்மைத் துறை (TDA) பிப்ரவரி 2025 முதல் 109 இடங்களில் இருந்து 1,101 விதைப் பொட்டலங்களை இவ்வாறு சேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நியூ மெக்ஸிகோ (New Mexico), ஓஹியோ (Ohio) மற்றும் அலபாமா (Alabama) போன்ற பிற அமெரிக்க மாநிலங்களிலும் இது போன்ற  சம்பவங்கள் […]