அரசியல் இலங்கை செய்தி

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை!

  • January 8, 2026
  • 0 Comments

“ ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. நீதியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.” இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 17 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க Ravi Karunanayake சபையில் இன்று (08)கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். “ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் […]

இந்தியா செய்தி

விமானங்களில் பவர் பேங்க் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு

  • January 8, 2026
  • 0 Comments

விமானப் பயணங்களின் போது லித்தியம் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகளைத் தவிர்க்க, பவர் பேங்க் (Power bank) பயன்பாட்டிற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி விமானத்தில் பயணம் செய்யும் போது கையடக்கத்தொலைபேசி அல்லது மடிக்கணினிகளை பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 100 வாட் அல்லது 27,000 mAh திறனுக்குக் குறைவான பவர் பேங்குகளை மட்டுமே பயணிகள் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. இவற்றை செக்-இன் (Check-in) […]

இலங்கை செய்தி

பொதுப் போக்குவரத்து உரிமம் கட்டாயம் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

  • January 8, 2026
  • 0 Comments

எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் தனியான பொதுப் போக்குவரத்து உரிமம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக சிறப்பான பயிற்சி நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கான பாடநெறி உள்ளடக்கம் ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பயணிகள் பேருந்துகள், பாடசாலை வேன்கள், அலுவலகப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் இந்த பொதுப் போக்குவரத்து உரிமம் அவசியமாக இருக்கும் என அமைச்சர் கூறினார். தற்போது கனரக வாகன உரிமம் 21 வயதில் […]

உலகம் செய்தி

சீனாவில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை ; தலைவர்கள் கைது

  • January 8, 2026
  • 0 Comments

“சீனாவில் அரசு அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ (Chengdu) நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ (Early Rain) தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், அதன் தற்போதைய தலைவர் லி யிங்சியாங் (Li Yingqiang) உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், ‘சீனாவின் எருசலேம்’ என்று அழைக்கப்படும் வென்சூ (Wenzhou) நகரில், பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் ‘யாயாங்’ (Yayang) தேவாலயக் கட்டிடம் […]

உலகம்

பெருவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

  • January 8, 2026
  • 0 Comments

பெருவில் 5.5 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.1 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேற்படி நிலநடுக்கமானது  சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெருவுக்கு அருகில் அமைந்துள்ள ஈக்வடாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கை செய்தி

கொல்லப்பட்டாலும் அழிக்க முடியாத குரல் லசந்த ,இன்றுடன் 17 வருடங்கள் -கொழும்பில் நினைவு தினம்  அனுஷ்டிப்பு

  • January 8, 2026
  • 0 Comments

ஊழல் மோசடிக்கு எதிராக பேனாவை பயன்படுத்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் கடந்துள்ளன. மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதன் 17 ஆவது ஆண்டு நினைவு தினம்  கொழும்பில் உள்ள பொரளை கல்லறையில் இன்று அனுசரிக்கப்பட்டது. அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊடக வல்லுநர்கள் மலர்கள் வைத்து  மெழுகுவர்த்திகளை ஏற்றி நினைவஞ்சலி செலுத்தினர். லசந்த மணிலால் விக்ரமதுங்க,  2009 ஆம் ஆண்டு ஜனவரியில் படுகொலை    செய்யப்பட்டார். அவர் அரசியல்வாதி, […]

ஆஸ்திரேலியா செய்தி

போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு ; ஆஸ்திரேலிய அரசு அதிரடி விசாரணை

  • January 8, 2026
  • 0 Comments

சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த மாதம் யூத பண்டிகையின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, நாட்டின் உயரிய அதிகாரமிக்க ‘ரோயல் கமிஷன்’ (Royal Commission) விசாரணைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸி (Anthony Albanese) உத்தரவிட்டுள்ளார். 15 பேர் கொல்லப்பட்ட இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் மற்றும் யூத அமைப்புகளின் கடும் அழுத்தத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வர்ஜீனியா பெல் ( Virginia Bell) […]

இலங்கை செய்தி

போக்குவரத்து விதிமீறல்களுக்கு காரணம் போதை? 43% ஓட்டுநர்கள் ஐஸ் பயன்படுத்துவதாக தகவல்

  • January 8, 2026
  • 0 Comments

கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களில் 43 சதவீதம் பேர் ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் என ஆய்வொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக   நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன் கொழும்பில் 25 சதவீத ஓட்டுநர்கள் கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பா

UK கவுன்சில்களில் சைபர் தாக்குதல் – இலட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டிருக்கலாம்!

  • January 8, 2026
  • 0 Comments

கென்சிங்டன் (Kensington) மற்றும் செல்சியா (Chelsea) கவுன்சிலில் நடந்த சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள்  திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. எதிர்பாராத அழைப்புகள், செய்திகள் மற்றும் இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்,  பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்ட தரவின் சிறிய மாதிரிகள், அதில் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகிறது என மேற்கு லண்டன் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. மேலும் கவுன்சில் ஊழியர் எனக் கூறி தனிப்பட்ட தரவுகளை கேட்பவர்கள் தொடர்பிலும் எச்சரிக்கை […]

இலங்கை செய்தி

EPF தொடர்பான ஊடக செய்திகள் தவறானவை – தொழில் அமைச்சகம் விளக்கம்

  • January 8, 2026
  • 0 Comments

ஊழியர் சேமலாப நிதி (EPF) தொடர்பாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்த கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளாமல் சில ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக  தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற அமர்வில், EPF மற்றும் ETF நிதிகளின் பங்கு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஓஷானி உமங்கா ஹப்புஆரச்சி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர், EPF ஒரு சமூக பாதுகாப்பு நிதியாக செயல்படுகிறது என்றும், ETF வேறு நோக்கங்களுக்காக இயங்குகிறது என்றும் விளக்கினார். […]