மது குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்ற ஆயிரக்கணக்கான பெண்கள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வீரக்குடி நாட்டைச் சேர்ந்த கருக்காகுறிச்சியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.செல்லியம்மன் ஸ்ரீ.அகோர வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 27 ஆம் தேதி காப்பு கட்டுதழுடன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவில் மண்டக படிதாரர்களால் செல்லியம்மன் அகோர வீரபத்திரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்த நிலையில் பக்தர்கள் […]













