பிரித்தானிய தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் வெளியிட்ட அறிவிப்பு
இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச சமூகத்தினரால் கைவிடப்பட்ட, ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகளாக , சிங்கள அரசினால் பல்லாயிரக் கணக்கில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை படுகொலை செய்யப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் முள்ளிவாய்க்கால் மண்ணையும் கடலையும் செந்நிறம் ஆக்கி, மானுட வரலாற்றின் கருப்பு பக்கங்களை உருவாக்கியதனை உலகின் முன் வைத்து நீதி கோரும் குரல்களின் சங்கம தினமாகும். இலங்கை தீவானது 1948ஆம் ஆண்டில், பிரித்தானியாவிடம் சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்து சிறிலங்கா அரசினால் ஆரம்பிக்கப்பட்ட, தமிழின அழிப்பானது, கடந்த 75 வருடங்களாக இடையறாது தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் தமிழ் மக்களின் […]













