இந்தியா

ஒடிசா புகையிரத விபத்தில் இறந்த ஒருவரின் உடலுக்கு உரிமை கோரும் பல குடும்பத்தினர்!

ஒடிசாவின் பாலசோரில் நடந்த புகையிரத விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கேட்டு வரும் குடும்பத்தினருக்கு உதவியாக புவனேஸ்வர் மாநகராட்சி மற்றும் மேற்கு வங்காள அரசு இணைந்து உதவி மையங்களை ஏற்படுத்தி உள்ளன. இது குறித்து புவனேஸ்வர் நகர துணை காவல் ஆணையாளர் பிரதீக் சிங் கூறுகையில், ஒரு உடலுக்கு பல குடும்பத்தினர் உரிமை கோரும் குழப்பமான நிகழ்வும் காணப்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் நாங்கள் மரபணு பரிசோதனைக்கு செல்கிறோம். அனைத்து உடல்களில் இருந்தும் மரபணு மாதிரிகளை […]

இலங்கை

இலங்கைக்குள் சட்டவிரோத துப்பாக்கிகளும் கொண்டுவரப்படுகின்றன -டிரான் அலஸ்!

  • June 6, 2023
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தலுடன் சட்டவிராேத துப்பாக்கிகளும் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக பொது மக்கள் பாதுபாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். விசேட அதிரடிப்படையின் சோதனையின் மூலம் கடந்த 3வருடங்களில் 1163 சட்டவிராேத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற வாய்மொழிமூலமான கேள்வி நேரத்தின் போது ஆளும் கட்சி உறுப்பினர் சஞ்ஞீவ எதிரிமான்னவினால் கேட்கப்பட்ட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு பகுதிகளில் தற்போது மனித படுகொலைகள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்செயல்கள் இடம்பெற்று […]

இலங்கை

சென்னை : இலங்கை சொகுசுக் கப்பல் – ஆயிரக்கணக்கான பயணிகளுடன் முதல் சேவை

சென்னை – இலங்கை இடையேயான பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எம்.வி. எம்பிரஸ் (MS Empress) எனும் கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பித்து 1600 பயணிகளுடன் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளது. இந்தியாவின் முன்னணி கப்பல் நிறுவனமான Cordelia Cruises உடன் ஏற்படுத்தப்பட்ட புதிய கூட்டிணைவின்படி, இந்த கப்பல் நேற்று (05) பிற்பகல் சென்னையில் இருந்து இலங்கைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது. இந்தக் கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய 3 […]

ஆரோக்கியம் வாழ்வியல்

வெறும் காலில் நடப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

  • June 6, 2023
  • 0 Comments

நடக்கும்போது அல்லது ஓடும் போது காலணிகள் அல்லது ஷூக்கள் அணிந்து செல்வதுதான் உலகம் முழுக்க மக்களின் வழக்கமாக இருக்கிறது. உண்மையில் வசதியாக நடப்பதற்காக ஷூக்களுக்கு அதிக பணத்தை செலவழிக்கும் வழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால் வெறும் காலில் நடப்பதில் இருக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரியாது என்பதே உண்மை. வெறும் காலில் நடப்பது ‘எர்திங்’ அல்லது ‘கிரவுண்டிங்’ என்றும் அழைக்கப்படுகிறது, வெறுங்காலுடன் நடப்பது நமது சருமத்தை பூமியுடன் நெருங்கிய தொடர்பில் வைக்கிறது. இதன்மூலம் பூமியின் எதிர்மறை அயனிகள் […]

இலங்கை

சடலம் மீது சேட்டை செய்த இளைஞர்களினால் ஏற்பட்ட பதற்றம்!

குளியாபிடிய உள்ள நகரப் பகுதியில் பொசோன் தினத்தை முன்னிட்டு “பேய் வீடு“ ஒன்றை அங்குள்ள ஒருவர் நிர்மாணித்திருக்கிறார். இந்த பேய் வீட்டில் சவப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டு அதில் சடலம் போல ஒருவரை படுக்க வைத்திருக்கிறார்கள். அந்த சடலம் திடிரென எழுவதும், பின்னர் படுத்துக்கொள்வதுமாக இருந்துள்ளது. இந்த பேய் வீட்டை பார்க்க மக்கள் அதிகளவில் வந்துள்ளனர். இப்படி அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று, சடலம்போல பேய் வீட்டில் படுத்திருந்தவரிடம் சேட்டை செய்துள்ளனர். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சடலமாக […]

இந்தியா

ஆந்திராவில் வயலில் கிடைத்த பொக்கிஷம் : விரையும் மக்கள்!

  • June 6, 2023
  • 0 Comments

ஆந்திராவில் விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் இருந்து கைப்பற்றிய 30 கேரட் வைரத்தை  2 கோடி ரூபாயிற்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம்,  கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி,  துக்கிலி,  மடிகேரா,  பெகதிராய்,  பேராபலி,  மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல் வெளிகளில்  மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு  விவசாயி ஒருவர்  60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் […]

வட அமெரிக்கா

கனடாவில் குடியேற விரும்புவோருக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவித்தல்

  • June 6, 2023
  • 0 Comments

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது. ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். *சுகாதார துறை *விஞ்ஞான, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள் *தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் ஒப்பந்த […]

பொழுதுபோக்கு

“இந்தியன் 2” பிரம்மாண்ட இயக்குனர் இரகசியமாக வைத்திருந்த அந்த ஒரு ரகசியம் கசிந்தது

  • June 6, 2023
  • 0 Comments

பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். இதற்கு காரணம் அவர் இயக்கிய படங்கள் தான். வழக்கமாக இயக்குனர்கள் சண்டைக்காட்சிகளை தான் பிரம்மாண்டமாக எடுப்பார்கள், ஆனால் இயக்குனர் ஷங்கர் அதற்கு ஒருபடி மேலே போய் பாடல்காட்சிகளில் வித்தியாசமாக யோசித்து பிரம்மாண்டத்தை புகுத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருப்பார். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கின்றனர். தற்போது ஷங்கர் இதுவரை இல்லாத வகையில் புது முயற்சியாக ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார். அதில் […]

உலகம்

தீவிரமடையும் போர் களம்! உக்ரைனில் நீர்மின் நிலைய அணை மீது தாக்குதல்

சோவியத் கால அணையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள உக்ரைன் நீர்மின் நிலைய அணை தகர்க்கப்பட்டது தொடர்பான காணொளியை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் சோவியத் கால ககோவ்கா நீர்மின் நிலைய அணை காணப்படுகிறது. உக்ரைனின் பிரதான நீர்மின் நிலையத்திற்கு நீரை வழங்கும் முக்கிய அணை இதுவாகும். இதற்கு காரணம் யார் என்று தெரியாத நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகின்றனர். அதே […]

இந்தியா ஐரோப்பா

அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்திய விமானம்

  • June 6, 2023
  • 0 Comments

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர் நோக்கி ஏ.ஐ.173 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்து உள்ளனர். இந்நிலையில், விமானத்தில் என்ஜின்களில் ஒன்று திடீரென பழுதடைந்து உள்ளது என கூறப்படுகிறது. இதனால், ரஷ்யாவின் மகதன் விமான நிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது. இதனை தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதுபற்றி […]