உலகம்

நைஜீரியாவின் நியாமி விமான நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு – 01 மணிநேரம் நீடித்த தாக்குதல்!

  • January 29, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் நியாமியில் (Niamey) உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் நேற்று துப்பாக்கிச் சூடு மற்றும் பலத்த வெடிச்சத்தங்கள் ஏற்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதாகவும், உடனடியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் ஏற்றுமதிக்காக   சுமார் 1,000 மெட்ரிக் டன் யுரேனியம் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்  இந்த […]

இலங்கை செய்தி

இலங்கையில் நிபா வைரஸ் பரவும் அபாயம் அதிகம் ? – சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

  • January 29, 2026
  • 0 Comments

இலங்கைக்குள் நிபா வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலத்தில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றுடைய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் […]

இலங்கை செய்தி

சுதந்திர தின விழாவுக்கு ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு!

  • January 29, 2026
  • 0 Comments

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. சுதந்திர தின விழா “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு நடைபெறும். இதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்றது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் ஊடக சந்திப்பில் […]

உலகம் செய்தி

ஈரானில் அதிகரித்து வரும் நெருக்கடி – மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்’!

  • January 29, 2026
  • 0 Comments

ஈரானில் அதிகரித்து வரும் நெருக்கடி குறித்து விவாதிக்க இஸ்ரேலிய மற்றும் சவுதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று அழைப்பு விடுத்துள்ளார். தெஹ்ரானுடனான பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில் சவுதி அரேபியாவின் தூதுக்குழுவொன்று அமெரிக்காவிற்கு தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து ட்ரம்ப் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே ஈரானுக்குள் இருக்கும் சாத்தியமான இலக்குகள் குறித்த உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் வொஷிங்டன் டிசியில் உள்ளனர். அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் முழு அளவிலான போராக […]

இலங்கை செய்தி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு – ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

  • January 29, 2026
  • 0 Comments

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை நாளை வெள்ளிக்கிழமை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது அடிப்படைச் சம்பளத்தை 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக 200 ரூபாய் […]

ஐரோப்பா

1,000 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்த ரஷ்யா!

  • January 29, 2026
  • 0 Comments

கைதிகள் பறிமாற்றத்தின் ஒரு பகுதியாக  1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனுக்கு அனுப்பிவைத்துள்ளதாக   கியேவ் (Kyiv) தெரிவித்துள்ளது. இதற்கு பிரதியீடாக  38 உடல்களை ரஷ்யா பெற்றதாக மொஸ்கோவின் தலைமை பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி (Vladimir Medinsky) கூறினார். உடல்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வெள்ளை குளிர்சாதன பெட்டிகளும், அதற்கு அருகில் பயோஹசார்ட்  (biohazard) உடைகள் அணிந்த நபர்கள் நிற்பதைக் காட்டும் ஒரு புகைப்படத்தையும் மெடின்ஸ்கி வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால மோதலின் போது கியேவ் மற்றும் […]

இந்தியா

முழு அரச மரியாதையுடன் அஜித் பவாரின் உடல் தீயுடன் சங்கமம்!

  • January 29, 2026
  • 0 Comments

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதிச் சடங்கு பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெற்றது. பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அஜித் பவாரின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அஜித் பவாரின் மகன்கள் பார்த் மற்றும் ஜெய் ஆகியோர் தங்கள் தந்தையின் சிதைக்கு தீ மூட்டினர். இறுதிச் சடங்கில் […]

இலங்கை செய்தி

சுதந்திர தின ஒத்திகை – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

  • January 29, 2026
  • 0 Comments

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா (ஓய்வுபெற்ற) தெரிவித்துள்ளார். 78 ஆவது தேசிய சுதந்திர தின விழா குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இம்முறை நடைபெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் முப்படையைச் சேர்ந்த 234 அதிகாரிகளும், 3323 ஏனைய தரப்பினரும், தேசிய மாணவர் படையணியின் 12 […]

ஐரோப்பா

புயல் கரையை கடந்த பின்னும் பிரித்தானியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து!

  • January 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை தாக்கிய சந்திரா புயலை தொடர்ந்து வெப்பநிலை சற்று உயர்ந்துள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய அறிவிப்பின்படி, இங்கிலாந்து முழுவதும் 76 வெள்ள எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. அத்துடன் 60 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இங்கிலாந்தின் தென்மேற்கில் கனமழை பெய்யும் என்று வானிலை அலுவலகம் மஞ்சள்  எச்சரிக்கையை விடுத்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக பயண இடையூறுகள் ஏற்படும் என்றும் அதிகாரிகள் முன்னறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

தென்னாப்பிரிக்காவில் பேருந்து ஒன்றுடன் மோதிய லொறி – 11 பேர் பலி!

  • January 29, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் சிறிய பேருந்து ஒன்று, லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் கிழக்கு குவாசுலு-நடால் (KwaZulu-Natal) மாகாணத்தில் உள்ள டர்பன் (Durban) அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜோகன்னஸ்பர்க் அருகே ஒரு லொறி மற்றும் மினிபஸ் டாக்ஸி மோதிய விபத்தில் 14 பாடசாலை மாணவர்கள்  கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த விபத்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.