உலகம் செய்தி

அமெரிக்காவின் கருவூலத்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்!

  • January 30, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை (IRS) மற்றும் கருவூலத் துறைக்கு எதிராக நேற்று வழக்குத் தொடர்ந்துள்ளார். தனது முதல் பதவிக் காலத்தில் தனது வரி வருமானம் சட்டவிரோதமாக ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டதாகக் கூறியே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். புளோரிடாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் மூலம் அவர் 10  பில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பீடு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது டொனால்ட் ட்ரம்ப் தனது மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் […]

உலகம்

அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்கள் : துருக்கியின் உதவியை நாடும் தெஹ்ரான்!

  • January 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான பதற்றங்கள் அதிகரித்து வருவதையடுத்து,  ஈரானின்  வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi), இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அங்காராவிற்கு (Ankara) பயணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாலும், மோதலைத் தவிர்க்க தெஹ்ரான் வலிமிகுந்த சமரசங்களைச் செய்வதாலும் துருக்கி அவசர மத்தியஸ்தத்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan), டொனால்ட் ட்ரம்புக்கும் அவரது ஈரானிய பிரதிநிதி மசூத் பெஷேஷ்கியனுக்கும் (Masoud Pezeshkian) இடையே ஒரு வீடியோ […]

உலகம்

கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது வரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்!

  • January 30, 2026
  • 0 Comments

கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். தேசிய அவசரகால அறிவிப்பின் கீழ் நிர்வாக உத்தரவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை கியூபாவிற்கு அழுத்தத்தை அதிகரித்துள்ளது. எந்தவொரு கட்டண விகிதங்களையும் குறிப்பிடவில்லை அல்லது அமெரிக்க வரிகளை எதிர்கொள்ளக்கூடிய தயாரிப்புகள் உள்ள எந்த நாடுகளையும் தனிமைப்படுத்தவில்லை. வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து ட்ரம்ப் கியூபாவை ஒப்பந்தம் ஒன்றை எட்ட நிர்பந்தித்தார். இதுவரை ஒப்பந்தம் ஒன்று எட்டப்படாத நிலையில், மேற்படி […]

விளையாட்டு

பதிலடி கொடுக்குமா இலங்கை?

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T – 20 கிரிக்கெட் போட்டி இன்று (30) நடைபெறுகின்றது. கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் Pallegala International Cricket Stadium இலங்கை நேரப்படி இன்றிரவு 7 PM மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இதற்கு முன் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் ODI கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. அந்த வெற்றியின் ஊக்கத்துடன் இங்கிலாந்து அணி டி20 தொடரிலும் முன்னிலை பெறும் […]

விளையாட்டு

தமிழ் வீரர் அசத்தல்: இலங்கை அணி வெற்றி!

  • January 30, 2026
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. U-19 ICC உலகக்கிண்ண போட்டியில், தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷ் தனது சுழல் புயல்மூலம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியமை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரை பலரும் பாராட்டிவருகின்றனர். அவரது பந்து வீச்சு பாணி தொடர்பான காணொளியும் வைரலாகி வருகின்றது. மேற்படி வெற்றியுடன் குழு 1இல் சுப்பர் சிக்ஸஸ் அணிகள் நிலையில் இலங்கை இரண்டாம் […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழருக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்!

  • January 30, 2026
  • 0 Comments

தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி United Socialist Party வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் விசேட கூட்டமொன்றை அக்கட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ். நல்லூரில் நடத்துகின்றது. கட்சி தலைவரான சிறிதுங்க ஜயசூரிய Siruthunga Jayasuriya சிறப்பு பேச்சாளராக பங்கேற்று, தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தவுள்ளார். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், வடக்கு மீன சமூகத்தின் பிரச்சினைகள் உடன் தீர்க்கப்பட வேண்டும் எனவும் […]

இலங்கை செய்தி

78 ஆவது சுதந்திர தினம்: வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அழைப்பு இல்லை!

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தின 78th Independence Day விழாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பிரமுகர்கள் அழைக்கப்படவில்லை. ஜனாதிபதி தலைமையிலேயே நிகழ்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 4 ஆம் திகதி “ கட்டியெழுப்புவோம் இலங்கையை” எனும் கருப்பொருளின் கீழ் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்றது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் பேராசிரியர் […]

உலகம் செய்தி

எம்மி விருது வென்ற பாலஸ்தீன பத்திரிகையாளரின் டிக்டாக் கணக்கு முடக்கம்

  • January 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவில்(America) புதிய முதலீட்டாளர்கள் சமூக ஊடக தளத்தை கையகப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, பாலஸ்தீன(Palestinian) பத்திரிகையாளர் பிசான் ஓவ்டாவின்(Bisan Owda) டிக்டோக்(Tiktok) கணக்கு நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. எம்மி விருது(Emmy Awards) பெற்ற பத்திரிகையாளரும், காசாவை(Gaza) சேர்ந்த அல் ஜசீரா AJ+(Al Jazeera AJ+) பத்திரிகையாளருமான பிசான் ஓவ்டா, தனது இன்ஸ்டாகிராம்(Instagram) மற்றும் எக்ஸ்(X) கணக்குகளில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து தனது டிக்டோக் கணக்கு தடைசெய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். “டிக்டோக் எனது கணக்கை நீக்கியது. எனக்கு அங்கு 1.4 […]

செய்தி விளையாட்டு

முதல் முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து

  • January 29, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில்(England) இந்த வருடம் ஜூன் மாதம் 12ம் திகதி மகளிர் கிரிக்கெட் டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நெதர்லாந்து(Netherland) அணி அமெரிக்காவை(USA) 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு முதல் முறையாகத் தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே நேபாளம்(Nepal) மற்றும் தாய்லாந்தை(Thailand) வீழ்த்தி இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் இடம் பிடித்துள்ளது […]

உலகம் செய்தி

14 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

  • January 29, 2026
  • 0 Comments

14 வருட இடைவெளிக்குப் பிறகு வங்கதேசம்(Bangladesh) மற்றும் பாகிஸ்தானுக்கு(Pakistan) இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது இரு முஸ்லிம் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான அறிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்நிலையில், டாக்காவிலிருந்து(Dhaka) கராச்சிக்கு(Karachi) புறப்படும் முதல் விமானம் BG-341 மூலம் நேரடி சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக பிமான் வங்கதேச ஏர்லைன்ஸ்(Biman Bangladesh Airlines) ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் இடையில்லா விமானங்கள் ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் […]