உலகம் முக்கிய செய்திகள்

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5500 டொலராக பதிவு!

  • January 29, 2026
  • 0 Comments

வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. அதன்படி, இன்று (29) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியுள்ளது. இதேவேளை நேற்று (28) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலரில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து இருப்புக்களை குவித்து […]

இலங்கை செய்தி

தேசிய வைத்தியசாலையாகிறது யாழ். மருத்துவமனை!

  • January 29, 2026
  • 0 Comments

“ தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன், விரைவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றமுடியும்.” இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க Dr. Anil Jasinghe தெரிவித்தார். சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க Nihal Abeysinghe தலைமையில் கூடியது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தின்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிறுவன மதிப்பாய்வு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தங்கம் வெல்ல அரிய வாய்ப்பு – நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் போட்டி!

  • January 29, 2026
  • 0 Comments

ராயல் மின்ட், “தி கிரேட் பிரிட்டிஷ் ட்ரெஷர் ஹன்ட்”  (The Great British Treasure Hunt) என்ற போட்டியை நாடு தழுவிய ரீதியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் போட்டி பங்கேற்பாளர்களுக்கு 250 கிராம் திட தங்கப் பட்டையை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது, தற்போது இதன் மதிப்பு £28,000 முதல் £29,000 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எண்கள், எழுத்துக்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெறும் ஒரு சிறப்பு £5 “பென்னி டிராப்ஸ்” (“penny drops)  நாணயமும் அடங்கும். இந்த […]

பொழுதுபோக்கு

“இனி எனது குரல் ஒலிக்காது” – பிரபல பின்னணி பாடகர் திடீர் முடிவு!

  • January 29, 2026
  • 0 Comments

இனி திரைப்படப் பாடல்களில் தனது குரல் ஒலிக்காது என அறிவித்துள்ளார் பிரபல பின்னணி பாடகர் அர்ஜித் சிங் Famous playback singer Arijit Singh. 15 வருடங்களாக திரைப்படங்களில் பாடிவரும் அவர், 38 வயதிலேயே இந்த முடிவை எடுத்தமை அவரது இரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்தியில் ஆஷிக் 2 படத்தின் ‘தும் ஹி ஹோ’ பாடல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றார். தமிழில், ‘நான் உன் அழகினிலே’, அடடா என்ன ஆழகு உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார். […]

இந்தியா

அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு!

  • January 29, 2026
  • 0 Comments

விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் Ajit Pawar இறுதிச் சடங்கு இந்திய நேரப்படி இன்று (29) முற்பகல் நடைபெறவுள்ளது. பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இடம்பெறவுள்ள இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் என தெரியவருகின்றது. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் நேற்று பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது […]

இலங்கை செய்தி

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

  • January 29, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe , அவரது பாரியாரின் பட்டமளிக்கு விழாவுக்காக லண்டன் சென்றது உத்தியோகப்பூர்வ விஜயம் அல்லவென்பது தெரியவந்துள்ளது என சட்டமா அதிபர், நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார். 36 மணிநேரத்துக்குள் 166 லட்சம் ரூபா நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார் என குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் […]

அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு சுரேஷ் அணியும் ஆதரவு!

  • January 29, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா Kivul Oya project திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கட்சியின் EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் Suresh Premachandran வெளியிட்டுள்ளார். “கிவுல் ஓயா என்ற புதிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை உருவாக்கி சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிக்கும் நோக்கில் அமுல்படுத்த எத்தனிக்கும் இத்திட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிராகரிக்க வேண்டும். இதற்கு அரசு செலவு செய்ய […]

உலகம்

கொலம்பியாவில் விமான விபத்து: 15 பேர் பலி!

  • January 29, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் Colombia இடம்பெற்ற விமான விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர். கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்திலுள்ள கிராம பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அரசுக்கு சொந்தமான Satena என்ற விமான சேவை நிறுவனமே குறித்த விமான சேவையை வழங்கியுள்ளது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்பதை கொலம்பியாவின் போக்குவரத்து அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். விமானம் பயணத்தை ஆரம்பித்து 12 நிமிடங்களில் தொடரை இழந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. விமான […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் பிற்போட திட்டம்?

  • January 29, 2026
  • 0 Comments

“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பி, இன்று ஆட்சியில் இருக்கும்போது மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara, தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ தலதாமாளிகைமீது தாக்குதல் நடத்திய கட்சியொன்றின் தலைவரே இன்று ஜனாதிபதியாக உள்ளார். இப்படியானவர்களிடம் எப்படி இன, மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்க […]

உலகம் செய்தி

சூடானுக்கு உதவ ஐ.நாவிற்கு 10 மில்லியன் டாலர் நிதி வழங்கிய சவுதி

  • January 28, 2026
  • 0 Comments

மோதலால் பாதிக்கப்பட்ட சூடானுக்கு குடிநீர் வழங்கவும் போரினால் சேதமடைந்த குழாய் வலையமைப்புகளை மறுசீரமைக்கவும் சவுதி அரேபியா(Saudi Arabia) ஐக்கிய நாடுகள் சபைக்கு 10 மில்லியன் டாலர் நிதி வழங்கியுள்ளது. சவுதி மேம்பாட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷத்(Sultan Abdulrahman Al-Marshad), ஐ.நாவுக்கான சூடானிய நிரந்தர பிரதிநிதி ஹசன் ஹமீத் ஹசன்(Hassan Hamid Hassan) மற்றும் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பர்ஹாம் சாலிஹ்(Barham Salih) ஆகியோர் சுவிட்சர்லாந்தின்(Switzerland) ஜெனீவாவில்(Geneva) ஒரு மானிய ஒப்பந்தத்தில் […]