ரஷ்யாவிடம் இருந்து ஏழு கிராமங்களை மீட்டது உக்ரைன்
கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷ்யப் படைகளிடமிருந்து வார இறுதியில் இருந்து கைப்பற்றியதாக திங்களன்று உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் கிழக்கு நகரமான பாக்முட் அருகே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட எதிர்த்தாக்குதலை மேற்கத்திய ஆயுதங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் கிராமங்கள் மீள கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஏழு கிராமங்கள் விடுவிக்கப்பட்டன,” என்று டெலிகிராமில் துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் கூறினார். இவை தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா […]













