ஆதரவாளர்களை ஏமாற்றி விட்டு இரகசியமாக வெளியேறிய ட்ரம்ப் !
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பரப்புரையின் இடையே தமது ஆதரவாளர்களுக்கு உணவு இலவசம் என அறிவித்துவிட்டு, பின்னர் பணம் தராமல் உணவகத்தில் இருந்து ரகசியமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். முதலில் மியாமி நீதிமன்றம் வரை சென்ற டொனால்டு ட்ரம்ப், சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து தமது ஆதரவாளர்களுடன் Little Havana பகுதிக்கு சென்ற ட்ரம்ப் அங்குள்ள புகழ்பெற்ற Versailles உணவகத்திற்கு சென்றுள்ளார். […]













