இந்தியா செய்தி

மத்திய பட்ஜெட் – 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்

  • February 1, 2026
  • 0 Comments

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பட்ஜெட் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார். மக்களவையில் 2026-27 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த நிலையில் இந்த பட்ஜெட் மகளிரை ஏராளமான துறைகளில் வலுப்படுத்தும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். எதிர்கால வளமான இந்தியாவுக்கு அடித்தளத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் […]

இலங்கை செய்தி

இலட்சியத்தை வெல்ல புலிகளுக்கு இனியாவது வாய்ப்புத்தாருங்கள் – புலம்பெயர் உறவுகளிடம் கோரிக்கை

  • February 1, 2026
  • 0 Comments

தமிழ்மக்கள் இலட்சியத்தை வெல்ல இனிமேலாவது போராளிகளை ஆதரிக்க வேண்டும் என புணர்வாழ்வழிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கான அரசியல் ரீதியான போராட்டம் 75 வருடங்களையும் தாண்டி நிற்கின்றது. ஆனால், இதுவரை எமது அரசியல் ரீதியான அபிலாசைகளை வென்றெடுத்துள்ளோமா என்ற கேள்வியும், இனியும் வென்றெடுக்க முடியுமா என்ற சந்தேகமுமே இருக்கின்றது. காலாகாலமாக […]

இலங்கை

இரவு நேரங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!

  • February 1, 2026
  • 0 Comments

இரவு நேரங்களில் பெண்களை சுகாதாரப் பணியாளர்களாகவும், உணவு சேவை உதவியாளர்களாகவும் பணியமர்த்த அனுமதி வழங்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய புதிய அறிவித்தலில் கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மாலை 6:00 மணிக்குப் பிறகுதான் ‘பெண்கள் கழிப்பறை உதவியாளர்களாக’ பணியமர்த்த சட்டம் அனுமதித்தது. புதிய வர்த்தமானி […]

உலகம் செய்தி

சீனாவின் அணு ஆயுத குவிப்பு – ஸ்டார்மரின் பயணத்தில் முக்கிய விவகாரம் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

  • February 1, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் தைவான் விவகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லையென குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.   அத்துடன் வேகமாக அதிகரித்து வரும் சீனாவின் அணு ஆயுதக் குவிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த, பிரதமர் தவறியுள்ளதாக the Guardian செய்தி வெளியிட்டுள்ளது.   சீனா உலகளவில் மிக வேகமாக அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   தற்போதைய […]

உலகம் முக்கிய செய்திகள்

ஈரானை தொட்டால் மத்திய கிழக்கில் பிராந்திய போர் வெடிக்கும் – கமேனி எச்சரிக்கை!

  • February 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் மத்திய கிழக்கில் பிராந்திய போரை ஏற்படுத்தும் என ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி ( Ali Khamenei) எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் சமீபத்திய மிரட்டல் குறித்து தெஹ்ரானில் இன்று கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்கா அதன் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பிற கனிம வளங்களில் ஆர்வமாக இருப்பதாக விவரித்தார். அவர்கள் “முன்பு கட்டுப்படுத்தியதைப் போலவே இந்த நாட்டையும் கைப்பற்ற விரும்புவதாகவும், இந்த முறை அவர்கள் ஒரு போரை நடத்தினால், அது […]

உலகம்

மினியாபோலிஸில் கூட்டாட்சி முகவர்களால் தடுத்துவைக்கப்பட்ட தந்தை, மகனை விடுதலை செய்ய உத்தரவு!

  • February 1, 2026
  • 0 Comments

மினியாபோலிஸில் (Minneapolis) கூட்டாட்சி முகவர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தந்தை மற்றும் 05 வயது சிறுவனை விடுதலை செய்யுமாறு கூட்டாட்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட நீதிபதி பிரெட் பியரி (Fred Biery) நிர்வாகத்தின் பெருமளவிலான நாடுகடத்தல் பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்ததுடன், அதை “தவறான கருத்தாக்கம் மற்றும் திறமையற்ற முறையில் செயல்படுத்தப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். நீதிபதியின் மூன்று பக்க உத்தரவில் சுதந்திரப் பிரகடனம் மற்றும் பைபிள் வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அத்துடன்  பிப்ரவரி 3 ஆம் திகதிக்குள் லியாம் […]

இலங்கை செய்தி

மத்திய வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்த இந்தியா

  • February 1, 2026
  • 0 Comments

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்த நிலையில் உட்கட்டமைப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த நிதியாண்டில் 300 கோடி ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த வருடம்  400 கோடி இந்திய ரூபா இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான […]

இலங்கை செய்தி

வடக்கின் பல மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்பட்ட T20 உலகக்கிண்ணம்

  • February 1, 2026
  • 0 Comments

இம்முறை இடம்பெறும் T20 உலகக்கிண்ணத்திற்கான வெற்றி கிண்ணம் இன்று வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று காலை 10.30 அளவில் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது வடமாகாண துடுப்பாட்ட சங்கத் தலைவர் உட்பட வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணிகள் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வரவேற்றனர். தம்புள்ளையில் இருந்து 7.30 க்கு எடுத்து வரப்பட்ட உலகக் கிண்ணமானது 8.30 க்கு மிஹிந்தலை நகரத்தில் வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு வவுனியாவில் வைக்கப்பட்டு, பின்னர் […]

இந்தியா செய்தி

வரவு செலவுத்திட்ட தாக்கல் – இந்தியப் பங்குச்சந்தை கடும் சரிவு

  • February 1, 2026
  • 0 Comments

இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமையான இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று இந்தியப் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாகும். ஆனால் வரவுசெலவுத்திட்டத்தை முன்னிட்டு இன்று பங்குச்சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் பிற்பகலுக்கு பின் நடைபெற்ற வர்த்தகத்தின் போது, மும்பை பங்குச்சந்தையின் 30 முக்கிய பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் முன்னணி 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 500 […]

இலங்கை

உழவு இயந்திரம் மோதி பாடசாலை ஆசிரியர் உயிரிழப்பு!!

  • February 1, 2026
  • 0 Comments

கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று (01) மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று பகல் சுமார் 12.00 மணியளவில் கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில் வீதியோரமாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மற்றுமொருவருடன் பேசிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வான் எல பகுதியில் இருந்து பெட்டியுடன் (Trailer) அதிவேகமாக வந்த உழவு இயந்திரம் (Tractor) கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]