இலங்கை செய்தி

மத்திய வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்த இந்தியா

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்த நிலையில் உட்கட்டமைப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த நிதியாண்டில் 300 கோடி ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த வருடம்  400 கோடி இந்திய ரூபா இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவுத்திட்டத்தை இன்று (01) தாக்கல் செய்தபோதே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது அவர் தாக்கல் செய்யும் 9-வது வரவு செலவுத்திட்டம் ஆகும்.

“வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற இலக்கை மையமாகக் கொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம் என்றும் கூறினார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை