இலங்கை

நகை கொள்ளையடித்த கும்பலை மடக்கி பிடித்த யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவு!

யாழ் மாவட்டத்தில் இரவில் கத்தி காட்டி மிரட்டி நகைகொள்ளை அடித்த கும்பல் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது,

யாழ் மாவட்டத்தில் வீடுகளுக்குள் இரவு வேளைகளில் கூரையினை பிரித்து வீட்டுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கத்தி காட்டி நகை கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் கடந்த வாரங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யாழ்மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத், அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ,மேனன் தலைமையிலான அணியினரால் குறித்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நல்லூர் பின் வீதியைச்சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்