நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் : ஒருவர் பலி, 09 பேர் காயம்!
கொழும்பு – கண்டி வீதியின் கஜுகம பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (29.08) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து தங்கொவிட்ட நோக்கி பயணித்த அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார். அத்துடன் […]













