இலங்கை

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கடும் மழை எச்சரிக்கை!

தீவு முழுவதும் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, செப்டம்பர் 01 ஆம் திகதி தீவின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலைமையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் தீவிபத்து – 73 பேர் உயிரிழப்பு!

  • August 31, 2023
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் ஜொகனஸ்பேர்கில் இடம்பெற்ற தீவிபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நள்ளிரவில் குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 07 குழந்தைகள் உள்பட 73 பேர் உயிரிழந்துள்ளதுடன். 52 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவசரகால சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி, இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.  மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறிள்ளார்.  

இலங்கை

இலங்கையில் தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • August 31, 2023
  • 0 Comments

40 வயதுக்கும் மேற்பட்டோர் தேசிய அடையாள அட்டை இன்றி இருக்கும் பட்சத்தில், 2500 ரூபாய் அபராதம் செலுத்தியே தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்ப்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இந்த தொகையை செலுத்த முடியாத குறைந்த வருமானம் பெருகின்றவர்கள் முன்னதாக செலுத்திய 250 ரூபாவை செலுத்தி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என […]

பொழுதுபோக்கு

விஜய் 68இல் இருந்து தூக்கப்பட்ட ஜோதிகா… வாய்ப்பை பிடித்த சிம்ரன்…

  • August 31, 2023
  • 0 Comments

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ஆரவாரமாக வெடிக்க போகிறது. இப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றி கொடுத்து, வசூல் அளவில் சாதனை படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனை தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார். அதற்கான வேலைகளும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஜய்யை இளமையாக காட்ட நவீன டெக்னாலஜியை பயன்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வேலைகளும் […]

வட அமெரிக்கா

பைடன் அமெரிக்காவை 3ம் உலகப்போரை நோக்கி அழைத்துச் செல்வார்- டிரம்ப் விமர்சனம்

  • August 31, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார். இதனிடையே அமெரிக்காவில் 2024இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஜோ பைடனை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த வீடியோவில், […]

ஐரோப்பா

தனது பதவியை இராஜினாமா செய்தார் பென் வாலஸ்!

  • August 31, 2023
  • 0 Comments

பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து பென் வாலஸ் முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பிரதமர் ரிஷி சுனெக்கிற்கு முறைப்படி கடிதம் மூலம் அறிவத்துள்ளார். குறித்த கடிதத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தான் பணியாற்றிய ஆயுதப் படைகள் மற்றும் உறுத்துறை சேவைகளை பாராட்டியுள்ளார். உக்ரைனில் நடந்த போருக்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பை பாராட்டிய அவர், ரிஷி சுனக் அதிபராகவும் பின்னர் பிரதமராகவும் ஆயுதப்படைகளில் முதலீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் உலகம் மேலும் பாதுகாப்பற்றதாகவும் மேலும் […]

இலங்கை

யாழில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தவர் கைது

  • August 31, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார். போயா தினமான நேற்று மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 25 போத்தல் சாராயம் என்பன […]

இலங்கை

இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

  • August 31, 2023
  • 0 Comments

பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார். பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சரினால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அவர் தொடர்ந்தும் பதவியில் இருந்தும் பயனில்லை என அவர் கூறியுள்ளார். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சர் திரன் அலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என  அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் அதிகரித்து வருகின்ற […]

இலங்கை

இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா!

  • August 31, 2023
  • 0 Comments

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது. இரண்டு குறுகிய தூர ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த ஏவுகணைகள் தென்கொரிய கடற்பரப்பில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவும் அமெரிக்காவும் ஆண்டுதோறும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு பதிலடியாக வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதலில் 18 பேர் சுட்டுக்கொலை; குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவம்

  • August 31, 2023
  • 0 Comments

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்ததால் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஈராக்கை மையமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தினர் சிரியாவை பாதுகாத்து வருகிறார்கள். இதனால் ஐ.எஸ். இயக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சி இயக்கங்களுக்கு ஆயுதங்கள் வழங்கியும், ராணுவ அறிவை பகிர்ந்துகொண்டும் அமெரிக்க ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. இதில் அமெரிக்க ராணுவத்தின் உதவியை சிரிய ஜனநாயகப்படை இயக்கமும், நாட்டில் உள்ள அரபு பழங்குடியினரும் அதிக அளவில் பெறுகிறார்கள். இருவேறு கொள்கைகளை கொண்ட இரு கும்பல்களுக்குள் அவ்வப்போது மோதல் போக்கு நிலவி […]