இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செப்டம்பர் ஆரம்பிக்க தீர்மானம்

  • August 31, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி எதிர்வரும் 05.09.2023 அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம். கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் விஷேட வழக்கு இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் அனைத்து திணைக்களங்களங்களின் சம்பந்தந்தங்களுடன் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தீர்மானக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐவர் கைது! பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கடற்படையினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. போதைப்பொருட்களை சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டு செல்வதற்காக விசேடமாக தயார் செய்யப்பட்டிருந்த கெப் வாகனத்துடன் குறித்த ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் 15 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

பொழுதுபோக்கு

விஜயுடனான 9 வருட பகையை மகன் மூலம் முடிவுக்கு கொண்டு வந்த சுபாஸ்கரன்…

  • August 31, 2023
  • 0 Comments

தற்சமயம் சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை பற்றிய பேச்சுத்தான். இவருக்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பான படிப்பை படிக்க வைப்பதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பினார். படித்து முடித்ததும் விஜய் போலவே ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவருடைய தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை லைக்கா தயாரிக்கிறது இந்த விஷயம் விஜய்க்கு தெரியாதாம். […]

மத்திய கிழக்கு

எகிப்தில் தங்க நாக்கு உடைய மம்மிகள் கண்டுபிடிப்பு!

  • August 31, 2023
  • 0 Comments

2000 வருடங்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட மம்மிகளில் தங்க நாக்குகள் பொறுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிப்பு எகிப்தின் மத்திய நைல் டெல்டாவில் Quweisna என்ற இடத்தில் உள்ள அலெக்ஸாண்டிரியாவின் டபோசிரிஸ் மாக்னா கோவிலில் மோசமான நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்ட 16 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1000 ஆண்டுகள் வரை நிலத்தில் புதைந்து இருந்த இந்த மம்மிகளில் ஒற்றுமையான முறையில் மண்டை ஓட்டில் தங்க நாக்கு பொறுத்தபட்டுள்ளது. எகிப்தின் தொல்பொருள் அமைச்சகம் இதனை ஆவணப்படுத்தியன் மூலம், மம்மி படுத்தப் பட்டவர்கள் […]

ஆசியா

G20 மாநாட்டில் தவிர்க்கும் சீன அதிபர்!

  • August 31, 2023
  • 0 Comments

சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டைத் தவிர்க்கக்கூடும் என்று இந்தியா மற்றும் சீனாவில் உள்ள தகவல் அறிந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக சீனாவை தளமாகக் கொண்ட அதிகாரிகள், பெய்ஜிங் சார்பாக இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சகங்களின் செய்தித் தொடர்பாளர்கள் இது குறித்து பதிலளிக்கவில்லை. இதற்கிடையே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினும் ஜி20 மாநாட்டை தவிர்த்துள்ளார்.

இலங்கை

பணவீக்கம் தொடர்பில் வெளியான அறிக்கை!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அறவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஆகஸ்ட் 2023 இல் 4% ஆகக் குறைந்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜூலையில் பதிவாகிய 6.3% ஆகக் குறைந்துள்ளது. உணவுப் பணவீக்கம் ஜூலையில் பதிவாகியிருந்த -1.4% இல் இருந்து ஆகஸ்டில் -4.8% ஆகக் குறைந்துள்ளது, அதே சமயம் உணவு அல்லாத பணவீக்கம் ஜூலையில் பதிவாகிய 10.5% இலிருந்து ஆகஸ்டில் 8.7% ஆகக் குறைந்துள்ளது.  

இலங்கை

இங்கிலாந்தின் புதிய பாதுகாப்பு அமைச்சராக கிராண்ட் ஷாப்ஸ் நியமனம்!

  • August 31, 2023
  • 0 Comments

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த பென் வாலஸ் பதவி விலகியுள்ள நிலையில், தற்போது அந்த பதவிக்கு புதிதாக கிராண்ட் ஷாப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடத்திற்குள் அவருக்கு கிடைத்த 5வது கேபினட் அமைச்சர் பதவி இதுவாகும். தற்போது வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பென் வாலஸ் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இலங்கை

திருகோணமலையில் மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம்!

திருகோணமலை- வெருகல் – நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெருகல் மக்கள் மூன்றாவது தடவையாகவும் இன்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெருகல் – நாதனோடை பகுதியில் 1000 கியூப் மணல் அகழ்வதற்கான அனுமதி தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவ்விடத்தில் மணல் அகழப்பட்டால் அது வெருகல் ஆற்றின் அணைக்கட்டை உடைக்கும் அபாயம் இருப்பதாகவும் இதனால் மக்களுடைய உடமைகள், வாழ்வாதாரம் என்பன பாதிக்கும் என்பதனால் அப்பகுதி மக்கள் இன்றைய தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 27ம் […]

செய்தி

தாறுமாறாக பட்டையை கிளப்பும் ஜவான் ட்ரைலர்… அட்லி என்னடா பண்ணி வச்சிருக்க?

  • August 31, 2023
  • 0 Comments

பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் மிகப் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஜவான் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வரும் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் நேற்று இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லரும் ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறது. அதிலும் படத்தின் […]

இலங்கை

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!

  • August 31, 2023
  • 0 Comments

அம்பலாங்கொட தர்மசோகா கல்லூரிக்கு அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் வேனில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.