இலங்கை பொழுதுபோக்கு விளையாட்டு

800லிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு நாமல் ராஜபக்ச வருத்தப்படுகின்றார்….

  • September 6, 2023
  • 0 Comments

முத்தையா முரளிதரனின வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச வருத்தப்பட்டிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன். தூஸ்ரா வகை பந்துகளை வீசும் அவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு பேட்ஸ்மேன்கள் நடுங்கிய காலம் ஒன்று உண்டு. இந்தச் சூழலில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதி […]

ஆசியா

அணு உலை கழிவுநீர் வெளியேற்றம் – கடல் உணவுகள் தொடர்பில் அச்சத்தில் ஜப்பானியர்கள்

  • September 6, 2023
  • 0 Comments

புகுஷிமா அணு உலை கழிவு நீர் பசுபிக் பெருங்கடலில் வெளியேற்றப்பட்டும் இடம் அருகை பிடிக்கப்படும் மீன்கள் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கான்றனவா என தினமும் சோதனை நடத்தி வருவதாக ஜப்பான் நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அச்சமின்றி மீன் வாங்கி சாப்பிட ஏதுவாக ஆய்வு முடிவுகளை தினமும் இணையத்தில் அவர்கள் பதுவேற்றி வருகின்றனர். ரிட்டியம் என்ற கதிர்வீச்சு தனிமத்தை தவிர மற்ற அனைத்து கதிர்வீச்சு தனிமங்களையும் அகற்றிய பின்பே கழிவு நீர் கடலில் வெளியேற்றப்படுவதாக ஜப்பான் […]

இலங்கை

துபாயில் இலங்கையர் ஒருவருக்கு அடித்த அதிஷ்டம்!

  • September 6, 2023
  • 0 Comments

துபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் “அபுதாபி பிக் டிக்கெட்” லாட்டரியை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு இருபது மில்லியன் திர்ஹம் எனத் தெரிவிக்கப்படுகிறது. துபாயில் பணி ஆய்வாளராக பணிபுரியும் பிரபாகர் என்பரே குறித்த சீட்டளிப்பில் வெற்றிப்பெற்றுள்ளார்.

உலகம்

உடல்நிலை மோசமான நிலையில் ஆங் சான் சூகி! மறுக்கப்பட்ட அவசர சிகிச்சை- மகன் குற்றச்சாட்டு

மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு உடல்நிலை சரியில்லாத போதிலும் மருத்துவ உதவி மறுக்கப்படுவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். கிம் அரிஸ் கூறுகையில், நாட்டை ஆளும் ஆட்சிக்குழு தனது தாயின் “அவசர சிகிச்சை”க்கான சிறை அதிகாரிகளின் கோரிக்கையைத் தடுத்தது. கடுமையான பல்வலியால் 78 வயதான அவர் சாப்பிட முடியவில்லை. எவ்வாறாயினும், சூகி நலமுடன் இருப்பதாகவும், இராணுவம் மற்றும் சிவில் மருத்துவர்களிடம் இருந்து பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் இராணுவ ஆட்சிப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சூகி பிப்ரவரி 2021 இல் […]

வட அமெரிக்கா

கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல்- சிறுமியொருவர் பலி!

  • September 6, 2023
  • 0 Comments

கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான். டுன்டாக் ட்ரைவ் மற்றும் அன்ட்ரிம் கிரசென்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.எதனால் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளயிடவில்லை.

பொழுதுபோக்கு

21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளராக வருகிறார் டி.ராஜேந்தர்

டி. ராஜேந்தர் கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் தனது பன்முக ஆளுமைக்காக தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் தனது படங்களில் திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் என பல வகைகளில் சேவையாற்றுகிறார். சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்தர், ‘நான் கடைசிவரைத் தமிழன்’ என்ற புதிய படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ்நாடு சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்கள் சங்கத் […]

இலங்கை

சுரேஷ் சாலி மற்றும், பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் – விஜித ஹேரத்!

  • September 6, 2023
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலியை உடனடியாக பதவி நீக்கம் செய்து அவருக்கு எதிராகவும் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராகவும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று (06.09) செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “  சுரேஷ் சாலி அரச புலனாய்வு […]

இலங்கை

கலை பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த வரணி மத்திய கல்லூரி மாணவி சுவர்க்கா

  • September 6, 2023
  • 0 Comments

யாழ் மாவட்டத்தில் கலை பிரிவில் வரணி மத்திய கல்லூரி மாணவி இராசரத்தினம் சுவர்க்கா முதலிடம் பெற்றுள்ளார். க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் மாலை வெளியானது. இந்த நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ,வரணி மத்திய கல்லூரி மாணவி இராசரத்தினம் சுவர்க்கா 3ஏ சித்திகளை பெற்று கலை பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார். வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் கலை பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். […]

இந்தியா

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி அவசர கடிதம்!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் திகதி முதல் 22-ந் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். சோனியா காந்தியின் கடிதம், அதானி குழுமத்திற்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை, விவசாயிகளின் MSP உயர்வுக்கான கோரிக்கைகள், மணிப்பூர் நிலைமை, வகுப்புவாத பதட்டங்களின் அதிகரிப்பு, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அவசியம், சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட […]

இலங்கை

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் எப்போது உள்வாங்கப்படுவார்கள்?

  • September 6, 2023
  • 0 Comments

2022/23 ஆம் கல்வியாண்டில் மொத்தமாக 45,000 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். விண்ணப்பங்களுடன் கூடிய கையேடுகள் அங்கீகரிக்கப்பட்ட புத்தகக் கடைகளில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.