இலங்கை

மின்சார சபையில் ஊழியர்களை குறைக்க வேண்டி வரும் – காஞ்சன!

  • September 6, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத் திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபை மறுசீரமைப்பின் போது அந்த ஊழியர்களை குறைக்க வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறிய அவர்,  சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியின் பின்னர் குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உலகம்

கின்னஸ் உலக சாதனை படைத்த கோழி! அப்படி என்ன செய்தது?

ஒரு கோழியின் ஆயுட்காலம் பொதுவாக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை இருக்கும். சில நேரங்களில், வெவ்வேறு இனங்கள் மற்றும் பிற காரணிகளால் ஆயுட்காலம் மாறுபடலாம். உலகின் மிகப் பழமையான கோழி 20 வயது 272 நாட்களை எட்டியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த தம்பதியினர், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுடன் பண்ணை வைத்துள்ளனர். இதில், பீனட் என்ற கோழி, வாழும் கோழி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. கோழியின் உரிமையாளர் மார்சி பார்க்கர் […]

ஐரோப்பா

கிரீஸில் காரை கடலுக்குள் இழுத்து சென்ற சூறாவளி!( வீடியோ)

  • September 6, 2023
  • 0 Comments

கிரீஸ் நாட்டின் வடக்கே சில நாட்களுக்கு முன் காட்டுத்தீயால் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையில் இருந்து டேனியல் என்ற சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், நிலச்சரிவு ஏற்பட்டது. பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 20க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. வீடுகள், தெருக்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த சூழலில், பெலியான் […]

பொழுதுபோக்கு

தளபதி 68-இல் இணையும் டாப் ஸ்டார்… கம் பெக் கொடுக்க தயாராகும் பிரசாந்த்?

  • September 6, 2023
  • 0 Comments

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு, தளபதி 68 படத்துக்காக பிரசாந்த் இறங்கி வந்தே ஆக வேண்டும் என ஒரு ஃபிளாஷ்பேக் ஸ்டோரி கூறியுள்ளார். தளபதி 68 படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தளபதி 68 […]

ஐரோப்பா

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ட்ரோன் தாக்குதல் – 16 பேர் உயிரிழப்பு!

  • September 6, 2023
  • 0 Comments

கிழக்கு உக்ரைனில் உள்ள கோஸ்டியன்டினிவ்கா நகரில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்ய படையினர் நடத்திய இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். போர்க்களத்திற்கு அருகாமையில் உள்ள தொழில் நகரத்தில் இந்த  தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய அதிகாரிகள் டெலிகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். ரஷ்யாவினுடைய  தீமை கூடிய விரைவில் தோற்கடிக்கப்பட வேண்டும் என Zelenskiy கூறினார். இது […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சதித்திட்டம் குறித்து சுயாதீன சர்வதேச குழு விசாரிக்க வேண்டும்! கார்டினல் மல்கம் ரஞ்சித்

இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சதித்திட்டம் குறித்து ‘சுதந்திரமான, பக்கச்சார்பற்ற, நீதியான, வெளிப்படையான மற்றும் பரந்த’ விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் அரசாங்கத்தையும் கார்டினல் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். . இன்று (செப். 06) கொழும்பு பேராயர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் இருந்து நீக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகளின் உதவியுடன் சுதந்திரமான சர்வதேச புலனாய்வுக் குழுவின் ஊடாக இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் […]

இலங்கை

கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை!

  • September 6, 2023
  • 0 Comments

கஞ்சாவை மருத்துவ மூலிகையாக பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சாவை மருத்துவ மூலிகையாக பயிரிட அனுமதி வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்ட முன்மொழிவை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நேற்று (05.09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆயுர்வேத மூலிகைகளை மூலப்பொருளாக ஏற்றுமதி செய்வதை […]

இலங்கை

பேராதனை பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்துள்ளனர். அதன்படி, கொழும்பு கண்டி பிரதான வீதியில் பேராதனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வட அமெரிக்கா

உக்ரைனுக்கு பயணமாகியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

  • September 6, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 560 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் திடீர் பயணமாக இன்று உக்ரைன் சென்றுள்ளார். அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார். இந்த பயணத்தின் […]

இலங்கை

கின்னஸ் உலக சாதனை முயற்சி- இராணுவ வீரரின் சாதனை நடைபயணம் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பம்

  • September 6, 2023
  • 0 Comments

கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியாக 14 நாட்கள் இரவு பகல் ஓய்வின்றி தொடர்ச்சியாக இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள சாதனை நடைபயணத்தை இலங்கை இராணுவ வீரர் ஒருவர் பருத்தித்துறை-சக்கோட்டையில் இருந்து நேற்றைய தினம் ஆரம்பித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் பலாலி படைமுகாமில் கடமையாற்றும் சமிக்ஞைப் படைப்பிரிவை சேர்ந்த கீர்த்திரத்ன என்ற இராணுவ வீரரே உலக சாதனை நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை(05) மாலை 06 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து அரம்பித்துள்ள உலக சாதனை நடைபயணம் வரும் செப்டெம்பர் – […]