வட அமெரிக்கா

வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா…

  • September 6, 2023
  • 0 Comments

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த சூழலில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் இம்மாதம் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச […]

இலங்கை

இன்று காலை ஆரம்பமான கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி (photos)

  • September 6, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (06.09.2023) ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டதற்கமைய காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது. குறித்த சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் முன்னிலையில் […]

இந்தியா பொழுதுபோக்கு

நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸபந்தனா காலமானார்?

  • September 6, 2023
  • 0 Comments

நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸபந்தனா திடீரென காலமானார் என்ற பொய்யான தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி அவர்  நன்றாக இருப்பதாக உறுதிபடுத்தியுள்ளது. சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் தெரிவித்துள்ளது. 40 வயதான அவர், பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  

இலங்கை

முன்னறிவிப்பு இன்றி விடுப்பு எடுக்கும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

  • September 6, 2023
  • 0 Comments

முன்னறிவிப்பு இன்றி வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06.09) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் ஒருவர் அறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வைத்திய நிபுணர் விடுப்பு எடுத்ததன் காரணமாக பல சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை

இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட மகன் – பல வருடங்களாக காத்திருக்கும் தந்தையின் கோரிக்கை

  • September 6, 2023
  • 0 Comments

இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் பதினேழு ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை என கவலை வெளியிட்ட தந்தையார் தான் இறப்பதற்கு முன் தன் மகனை பார்க்க உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்தார். கல்வியங்காட்டில் உள்ள இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே தந்தையார் சுந்தரலிங்கம் அருணகிரிநாதர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]

இலங்கை

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் இருந்து விலக்கு!

  • September 6, 2023
  • 0 Comments

விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்ளூர் நெல் உற்பத்திக்கும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியிலிருந்து (SSCL) விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (06.09) டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். குறித்த பதவில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  பிப்ரவரி 2023 இல், நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு,  வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை திருத்த அமைச்சரவை […]

இலங்கை

கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று!

  • September 6, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று (06.09) விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவகாரம் குறித்து வரும் 08 ஆம் திகதி வரை விவாதம் நடைபெறவுள்ளதுடன், 08 ஆம் திகதி பின்நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரேரணையை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். நாட்டின் சுகாதாரத்துறை சமீபகாலமாக அதலபாதாளத்திற்குள் சென்றுள்ளது. தரமற்ற மருந்து இறக்குமதி, அரச அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து மருந்து […]

இலங்கை

மன்னாரை அச்சுறுத்திய கொள்ளையர்கள் – சுற்றிவளைத்த பொலிஸார்

  • September 6, 2023
  • 0 Comments

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியல் அரை உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (5) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 58 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு […]

இலங்கை

முல்லைத்தீவில் கோர விபத்து – ஸ்தலத்திலேயே உயிரிழந்த இரு இளைஞர்கள்

  • September 6, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் 21 ஆவது கிலோ மீட்டர் கல்லுக்கு அருகில் வீதியில் நின்ற உழவியந்திரத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இது இளைஞர்கள் உழவியந்திர பெட்டியுடன் மோதி விபத்தினை சந்தித்துள்ளார்கள். விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ள குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார்கள் உடலம் ஒட்டி சுட்டான் பொலிசாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது முள்ளியவளை பொன்னகர் […]

பொழுதுபோக்கு

“இதுதான் காரணம்” பளிச் பதில் கொடுத்த நடிகை கௌசல்யா

  • September 6, 2023
  • 0 Comments

90’ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் தான் ஏன் 40 வயதை கடந்தும் திருமணம் செய்யவில்லை என்ற உண்மையை கூறியுள்ளார். சினிமா மற்றும் சீரியல்களில் கொடி கட்டி பறந்த இவர் சில ஆண்டுகளிலேயே நடிப்பிற்கு குட் பை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பின் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார். இந்த நிலையில் தான் ஏன் இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் […]