இலங்கை செய்தி

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு

  • February 16, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் எதிர்பாராத அனர்த்த நிலைமைகளால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் இணைந்து விசேட கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத சந்தர்ப்பத்தில் அல்லது ஏதேனும் காரணத்தினால் பரீட்சைக்குச் செல்வதில் சிரமத்தை எதிர்கொண்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்புகொள்வதற்காக நேரடித் தொலைபேசி இலக்கங்கள் […]

உலகம்

நியூசிலாந்தின் சில பகுதிகளில் அவசரநிலை அறிவிப்பு – பல இடங்களில் மின் துண்டிப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

நியூசிலாந்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெலிங்டனில் இரவு முழுவதும் மணிக்கு 193 கிமீ வேகத்தில் காற்று வீசியதாகவும், மரங்கள் முறிந்து விழுந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் வெலிங்டனில் சுமார் 10,000 வாடிக்கையாளர்கள் உட்பட, பிராந்தியம் முழுவதும் 30,000 க்கும் மேற்பட்ட சொத்துக்களுக்கு மின் துண்டிப்பு அமுற்படுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வெலிங்டனில் இருந்து புறப்படும் பெரும்பாலான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் விமான நிலையம் […]

இலங்கை செய்தி

” அநுரவின் அழைப்பின் பின்னரே விளையாடும் முடிவை எடுத்தது பாகிஸ்தான்”

  • February 16, 2026
  • 0 Comments

“பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை வருகையானது , இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும்.” இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் Syed Mohsin Raza Naqvi, மற்றும் மனிதவள அபிவிருத்திக்கான அமைச்சர் chaudhry Salik Hussain ஆகியோர் உள்ளிட்ட தூதுக்குழுவுடனான சந்திப்பு இன்று (16) நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போதே அநுரகமார திஸாநாயக்க மேற்கண்டவாறு […]

இலங்கை செய்தி

யாழ். கோப்பாயில் மோதல்: நபரொருவர் அடித்துக் கொலை!

  • February 16, 2026
  • 0 Comments

யாழ்.Jaffna கோப்பாய் Coppai பகுதியில் இன்று (16) மாலை இடம்பெற்ற மோதலில் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை வீதியில் வசிக்கும் 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். போக்குவரத்துப் பாதை தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நீதிவானின் […]

இலங்கை

மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 கைதிகள் சிறையில் அடைப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி, 792 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் உட்பட 811 உள்ளூர் கைதிகள் மரண தண்டனை பெற்றுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஐந்து வெளிநாட்டினரும், பயங்கரவாதம் தொடர்பான குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட  நபர் ஒருவரும்  அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கூடுதலாக, 70 வெளிநாட்டினர் உட்பட 311 நபர்கள் தற்போது […]

இலங்கை

அம்பாறையில் பெரும்போக நெல் அறுவடை மும்முரம்-இடையிடையே மழையும் குறுக்கீடு!

  • February 16, 2026
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற அறுவடையின் போது இந்த முறை விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு விளைச்சல் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர். மேலும் கடந்த வருடங்களில் தொடர் நஷ்டத்தை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை கணிசமானளவு விளைச்சல் கிடைத்துள்ளது என குறிப்பிட்ட அவர்கள் இடையிடையே ஏற்படும் மழைவீழ்ச்சி காரணமாக தற்போது சிரமங்களை […]

இலங்கை செய்தி

கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நாட்டை வந்தடைந்தார்

  • February 16, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்துடன், டிட்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிடவுள்ள அவர், மீட்புப் பணிகளுக்காக சர்வதேச நாணய நிதியம் வழங்கக்கூடிய மேலதிக ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராயவுள்ளார். இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது. மேலும் எதிர்வரும் […]

ஐரோப்பா செய்தி

வருமானம் குறைவு, சேவை தேவைகள் அதிகரிப்பு – பெரும் சிக்கலில் குளோஸ்டர்ஷையர் கவுன்சில்கள்

  • February 16, 2026
  • 0 Comments

குளோஸ்டர்ஷையர் (Gloucestershire) பகுதியில் உள்ள உள்ளூர் கவுன்சில்கள், எதிர்வரும் 2026 மற்றும் 2027 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டங்களை இறுதி செய்யத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது குறைந்த நிதியில் அதிக சேவைகளை வழங்க வேண்டிய அழுத்தம் அதிகரித்து வருவதாக கவுன்சில் தலைவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் விளைவாக, குடியிருப்பாளர்களுக்கான கவுன்சில் வரி மீண்டும் உயர்வதற்கான அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில், குளோஸ்டர்ஷையர் கவுண்டி கவுன்சில் (Gloucestershire County Council) மற்றும் அந்தப் பகுதியிலுள்ள ஆறு […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி நாளை இந்தியா பயணம்: 19 ஆம் திகதி விசேட உரை!

  • February 16, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார். செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி உரையாற்றவுள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் வேலைக்காக போராடும் இளைஞர்கள்

  • February 16, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் பிராட்ஃபோர்ட் (Bradford) நகரில் இளைஞர்கள் வேலை தேடுவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாத்திமா ரஷீத் என்ற 19 வயதான பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக தாம் விண்ணப்பித்த வேலைகளின் விபரங்களை பதிவு செய்து வருகிறார். 16 வயதில் பாடசாலையை விட்டு வெளியேறிய அவர், இதுவரை 205 வேலைகளுக்கு விண்ணப்பித்தும் எந்தவொரு தொழிலும் கிடைக்கவில்லையென கவலை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் அண்மைய தரவுகளின்படி, பிராட்ஃபோர்டில் வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக 18 […]