ஐரோப்பா

சாகோஸ் தீவு ஒப்பந்தம் : எதிர்க்கும் முன்னாள் பிரதமர்கள்!! ட்ரம்பிடம் விசேட கோரிக்கை!

சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸுக்கு மாற்றும் இங்கிலாந்தின் திட்டத்தை கைவிட அழுத்தம் கொடுக்குமாறு  முன்னாள் பிரதமர்களான போரிஸ் ஜான்சனும் (Boris Johnson) லிஸ் ட்ரஸும் ( Liz Truss) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு வாஷிங்டனின் அதிகாரப்பூர்வ ஆதரவு இருந்தபோதிலும், குறித்த தீவு கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியாவை ‘விட்டுக்கொடுக்க வேண்டாம்’ என்று ட்ரம்ப் சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார்.

ஈரானுக்கு எதிரான எந்தவொரு சாத்தியமான நடவடிக்கைக்கும் குறித்த தீவு பயன்படும் என்றும் பிரித்தானிய பிரதமர் ஸ்டாமர் தவறு செய்வதாகவும் ட்ரம்ப் முன்னதாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அந்த தீவுக்கூட்டத்தை ஏறக்குறைய 90 வருட ஒப்பந்தத்திற்கு மொரீஷியஸுக்கு மாற்றக் கூடாது என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் முன்னாள் பிரதமர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்