ஆசியா

பெல்ட் அண்ட் ரோடு திட்டம் ;தலிபான்களுடன் கைகோர்க்கும் சீனா

  • October 20, 2023
  • 0 Comments

சீனாவின் மிக பிரமாண்டமான பெல்ட் அண்ட் ரோடு உள்கட்டமைப்பு திட்டத்தில் இணைய ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் ஆர்வம் காட்டியுள்ளது. இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த டெக்னிக்கல் குழுவையும் சீனாவுக்கு அனுப்ப உள்ளதாக ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், மத்திய ஆசிய நாடுகளை இணைக்கும் சீனாவின் ஒன் ரோடு ஒன் பெல்ட் எனப்படும் பட்டுப்பாதைத் திட்டத்தின் பொருளாதார வழித்தடத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதற்கு […]

உலகம்

இடம்பெயர்வு விதிகளை கடுமையாக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி

தீவிரவாத தாக்குதல்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், புலம்பெயர்ந்தோரில் பாதுகாப்பு அபாயமாக கருதப்படுபவர்களை வெளியேற்றவும் உறுப்பு நாடுகளை ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரான்சில் ஒரு ஆசிரியரும், பிரஸ்ஸல்ஸில் இரண்டு ஸ்வீடிஷ் பிரஜைகளும் இஸ்லாமிய போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு உள்துறை மற்றும் நீதி அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்நிலையில்,  இஸ்ரேல்-ஹமாஸ் போரை அடுத்து ஐரோப்பா முழுவதும் போலீசார் எச்சரிக்கை நிலையில் உள்ளனர்.  

பொழுதுபோக்கு

இலங்கை இயக்குநருடன் கைகோர்த்த மணிரத்னம்!

  • October 20, 2023
  • 0 Comments

இலங்கை சினிமாவின் உலக முகமாக அறியப்படக்கூடியவர் இயக்குநர் பிரசன்ன விதானகே. இவரது திரைப்படங்கள் இலங்கை போர் மற்றும் அந்நாட்டு மக்களின் பிரச்சினைகளை துணிந்து பேசக்கூடிய படங்களாக அமைந்துள்ளன. தமிழருக்கும், சிங்களருக்கும் இடையே நடந்த பிரச்சினைகளை நடுநிலையாக அணுகி அவர் எடுத்த ‘டெத் ஆன் எ ஃபுல் மூன் டே’ திரைப்படம் போரைக் கையிலெடுக்கும் நாடுகளின் மனசாட்சியை உலுக்கக்கூடிய ஒன்றாக அமைந்தது. தொடர்ந்து, ’வித் யு, வித்தவுட் யு’ என்ற படமும் தமிழர், சிங்கள பிரச்சினையை அடிப்படையாக வைத்தே […]

இலங்கை

மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் ;பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள்

  • October 20, 2023
  • 0 Comments

வடக்கு – கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை (20)பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது டன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்ட மைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப் படுத்திருந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது. மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக […]

ஐரோப்பா

ரஷ்ய போர்க்குற்றங்களுக்கான புதிய ஆதாரங்கள்: ஐ.நா விசாரணை

ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய ஆதாரங்களை ஐ. நா விசாரணை கண்டறிந்துள்ளது. உக்ரைன் மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழு, ரஷ்யப் படைகள் உக்ரைனில் “கண்மூடித்தனமான தாக்குதல்கள்” மற்றும் போர்க் குற்றங்களைச் செய்துள்ளன என்பதற்கான கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது, இதில் துஷ்பிரயோகம் மற்றும் ரஷ்யாவிற்கு குழந்தைகளை நாடு கடத்தியமை அடங்கும் “உக்ரைனில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்த பகுதிகளில், ரஷ்ய அதிகாரிகள் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியுள்ளனர் என்பதற்கான புதிய ஆதாரங்களை ஆணையம் […]

இலங்கை

மட்டக்களப்பில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி மோசடி

தாய்லாந்து, டென்மார்க், மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கொக்கட்டிச்சோலை பகுதியில் மோசடியில் ஈடுபட்ட மூவர் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சரணடைந்துள்ளனர். சந்தேகநபர்கள் மூவரையும் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்பாக கொடுத்த பணத்தினை பெற்றுத் தருமாறு கோரி ஒன்றுகூடிய காரணத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை காணப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு […]

இலங்கை

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதலை உடனடியாக நிறுத்தக்கோரி மூதூரில் ஆர்ப்பாட்டம்

  • October 20, 2023
  • 0 Comments

இஸ்ரேல் -பலஸ்தீன் மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும், பலஸ்தீனத்தில் இடம்பெறும் படுகொலைகள், வைத்தியசாலை மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மூதூரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மூதூரில் இன்று (20) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மூதூர் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியிலிருந்து நடைபவணியாக வந்து மூதூர் பிரதான வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பலஸ்தீனத்திற்கு ஆதரவான சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் […]

உலகம்

பேசல் விமான நிலையத்தில் குண்டு அச்சுறுத்தல்

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் அமைந்துள்ள பேசல் முல்க்ஹவுஸ் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு தொடர்பாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. குண்டு அச்சுறுத்தல் காரணமாக விமான பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டு இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக விமான நிலையத்தின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த குண்டு அச்சுறுத்தல் பொய்யானது என கண்டறியப்பட்டதன் பின்னர் விமான நிலையத்தின் வழமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு போலியாக குண்டு பீதியை ஏற்படுத்தியவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என விமான நிலைய நிர்வாகம் […]

பொழுதுபோக்கு

ஆபாச பட சர்ச்சை! கணவனை பிரிகின்றார் ஷில்பா ஷெட்டி

  • October 20, 2023
  • 0 Comments

நடிகை ஷில்பா ஷெட்டியை பிரிவாதாக ராஜ் குந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. 1993ஆம் ஆண்டு வெளியான பாஸிகர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று ஷில்பா ஷெட்டிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் பட வாய்ப்புகள் கிடைக்க அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு சரசரவென்று வளர்ந்து லீடிங் ஹீரோயின் ஆனார். ஹிந்தியில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தவர் பிரபுதேவா ஹீரோவாக […]

இந்தியா

பாஜக அமமுக கூட்டணி?- பதிலளித்த டிடிவி தினகரன்

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் அமமுக சார்பில் நாளை நடைபெற உள்ள ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார். இதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களின் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், ”ஒன்றிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர் கூட்டத்திற்காக கோவை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், வினாஷ காலே விபரீத புத்தி என்பது போல் அழிய போகிறவர்கள் தான் […]