பிறந்தநாளில் காதலருடனான திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள அமலாபால்
நடிகை அமலாபால் தனது 32வது பிறந்தநாளில் தனது காதலருடன் திருமணத்தை அறிவித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. ’சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அமலாபால் ‘மைனா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அதன்பிறகு, ‘தலைவா’, ’தெய்வத்திருமகள்’, ‘ராட்சசன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார். இவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆனபோது அமலாபாலுக்கு 23 வயது. இவருக்கும் ஏற்பட்ட கருத்து […]













