பொழுதுபோக்கு

பிறந்தநாளில் காதலருடனான திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள அமலாபால்

நடிகை அமலாபால் தனது 32வது பிறந்தநாளில் தனது காதலருடன் திருமணத்தை அறிவித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

’சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அமலாபால் ‘மைனா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அதன்பிறகு, ‘தலைவா’, ’தெய்வத்திருமகள்’, ‘ராட்சசன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார். இவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆனபோது அமலாபாலுக்கு 23 வயது. இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.

இந்த நிலையில், விஜய், ஐஸ்வர்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. விவாகரத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட அமலாபால், தயாரிப்பில் கவனம் செலுத்தினார். இதுமட்டுமல்லாது இமயமலை, காடுகள் என அதிக பயணம் மேற்கொண்ட அமலா தான் ஒரு நாடோடி வாழ்க்கையை விரும்புவதாகவும் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் வந்துள்ளது எனவும் பேட்டிகளில் தெரிவித்தார்.

See also  தளபதி 69 படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை... அட இவங்களா?

Video: Amala Paul, Jagat seal it with a kiss as he proposes to her on brithday - India Today

இரண்டாவது திருமணம் குறித்தான கேள்விகளுக்கு, ‘திருமணம் செய்வதில் வெறுப்பு இல்லை. சரியான நபரை சந்தித்து திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆக எனக்கும் ஆசை’ எனத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று தனது 32வது பிறந்தநாளில் அமலாபால் தனது காதலர் ஜெகத் தேசாயுடன் திருமணத்தை அறிவித்துள்ளார்.

கஃபே ஒன்றில் அமலாபால் முன்பு நடனம் ஆடி மோதிரத்துடன் தன் திருமணத்தைத் தெரிவிக்க அமலாபால் அதற்கு தன் காதலருக்கு உதட்டு முத்தமிட்டு சம்மதம் தெரிவித்துள்ளார். ‘என் ஜிப்ஸி கேர்ள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள். பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே!’ என ஜெகத் கூறியுள்ளார். அமலாபாலின் புதிய தொடக்கத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/Cy2ZeoxB_Yl/?utm_source=ig_web_copy_link

(Visited 8 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content