இலங்கை

இலங்கையில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

  • October 27, 2023
  • 0 Comments

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் திரு இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இவ்வாறு கூறினார். மின்சார உற்பத்தி மூலப்பொருட்களை சேகரிப்பது தொடர்பாக அதன் சப்ளையர்களுடன் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.  

ஐரோப்பா

ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டல் – வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்

  • October 27, 2023
  • 0 Comments

ஜெமனியின் பொது ஒலிபரப்பான ZDFக்கு எதிராக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்கு நகரமான Mainz இல் உள்ள பல கட்டிடங்களை ஜேர்மன் பொலிசார் திங்களன்று சுற்றிவளைத்த நிலையில் அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்யியுள்ளனர். மெயின்ஸில் உள்ள ZDF ஸ்டுடியோவிற்கு எதிராக காலை 08:20 மணியளவில் மிரட்டல் வந்ததாக பொலிசார் தெரிவித்தனர். “வளாகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் பிற நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டன என்று பொலிஸார் ஒரு […]

தென் அமெரிக்கா

அமெரிக்காவில் வெங்காயத்தால் வந்த வினை : சால்மோனெல்லா விஷத்தால் 73 பேர் பாதிப்பு!

  • October 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் சால்மோனெல்லா விஷம் காரணமாக ஏறக்குறைய 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துண்டுகளாக வெட்டப்பட்ட வெங்காயத்தின் மூலமாக குறித்த விஷம் அமெரிக்காவின் 22 மாநிலங்களில் பரவியதாக கூறப்படுவதுடன், மதிப்பிடப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட தொற்றுப்பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சால்மோனெல்லா விஷமானது வைத்தியர்களின் தேவையின்றியே குணமடைவதால் பாதிப்புக்கு உள்ளான பெரும்பாலானோர் இது சம்பந்தமான பரிசோதனையை மேற்கொள்ளவில்லை என தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. பெரும்பாலம் பச்சையாக உண்ணக்கூடிய […]

மத்திய கிழக்கு

50 பணயக் கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவிப்பு!

  • October 27, 2023
  • 0 Comments

ஹமாஸின் இராணுவப் பிரிவு அல்-கஸ்ஸாம் நேற்று (26.10) இஸ்ரேலிய வான்வழித் பகுதியில் நடத்திய தாக்குதல்களில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாகக் கூறியது. “ஜியோனிச குண்டுவீச்சு மற்றும் படுகொலைகளின் விளைவாக காசா பகுதியில் கொல்லப்பட்ட சியோனிஸ்ட் கைதிகளின் எண்ணிக்கை தோராயமாக 50 பேரை எட்டியதாக அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ் மதிப்பிடுகிறது” என்று டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ட இருப்பினும், பணயக்கைதிகளின் மரணம் குறித்த கூடுதல் விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.

ஆசியா

சிங்கப்பூரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள் – விசாரணையில் வெளிவந்த தகவல்

  • October 27, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் – பாசிர் ரிஸ் சென்ட்ரலில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை திருடியதாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8.40 மணியளவில் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த நபரிடமிருந்து புகார் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். “தொடர் விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், பெடோக் பொலிஸார் பிரிவு அதிகாரிகள் அந்த 4 பேரின் அடையாளத்தை கண்டறிந்தனர். அதன் பின்னர், அக்டோபர் […]

இலங்கை

இலங்கையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்!

  • October 27, 2023
  • 0 Comments

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று (27.10) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீற்றாக உயர்ந்தால் கனமழை பெய்யும் என்றும்  மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் நபர் மரணம் – கொலையாளியை காட்டிக்கொடுத்த iPhone

  • October 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்ட இளையர் ஒருவர், அப்போது iPhone திறன்பேசியைக் கீழே தவறவிட்டிருந்தார். இவ்வாண்டு மார்ச் மாதம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது. அந்த இளைஞர்தான் iPhoneனின் உரிமையாளர் என்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். திறன்பேசியையும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காணொளியையும் ஆதாரமாக வைத்து, 18 வயது சான்செஸ் ஸ்பென்ஸ் கைது செய்யப்பட்டார். 47 வயது ராபர்ட் ஜொய்னரை ஸ்பென்ஸ் சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜொய்னர் தலையில் சுடப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட […]

இலங்கை

கொழும்பில் நடுத்தர மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் : வெளியான அறிவிப்பு!

  • October 27, 2023
  • 0 Comments

சிறிய மற்றும் நடுத்தர மக்களுக்காக கொழும்பு நகரில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீன அரசாங்கத்திடம் இருந்து ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (26.10) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் 3 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி – காயத்துடன் கைதான தாய்

  • October 27, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மூன்று மாத கைக்குழந்தை ஒன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தது. இந்த இச்சம்பவம் சென் மார்ன் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தந்தை ஒருவர் காயமடைந்த கைக்குழந்தை ஒன்றை எடுத்துக்கொண்டு அவசரமாக வருகை தந்துள்ளார். குழந்தை நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைக்கு உட்படுதப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை சில நிமிடங்களில் உயிரிழந்தது. சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் 54 வயதுடைய தந்தை தெரிவிக்கையில், வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது குழந்தை காயமடைந்து கிடந்ததாகவும், […]

இலங்கை

பாரிய சர்ச்சைக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்ட சீனக் கப்பல்

  • October 27, 2023
  • 0 Comments

பாரிய சர்ச்சைக்கு மத்தியில் சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் “ஷி யான் 6” கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. கப்பல் வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சீன கடல் ஆய்வுக் கப்பல் வருகை குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சூழல் உருவானது. எனினும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தன. “ஷி யான் 6” என்பது புவி இயற்பியல் ஆய்வுக்காக நில […]