ஐரோப்பா

பிரான்ஸில் 3 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி – காயத்துடன் கைதான தாய்

பிரான்ஸில் மூன்று மாத கைக்குழந்தை ஒன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தது.

இந்த இச்சம்பவம் சென் மார்ன் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தந்தை ஒருவர் காயமடைந்த கைக்குழந்தை ஒன்றை எடுத்துக்கொண்டு அவசரமாக வருகை தந்துள்ளார்.

குழந்தை நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைக்கு உட்படுதப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை சில நிமிடங்களில் உயிரிழந்தது.

சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் 54 வயதுடைய தந்தை தெரிவிக்கையில், வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது குழந்தை காயமடைந்து கிடந்ததாகவும், அவரது தாயார் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், முதல்கட்டமாக அவரைக் கைது செய்ததுடன், சில மணிநேரம் கழித்து அவரது மனைவியை காயமடைந்த நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்