அவசர ஊர்திகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் ; 15பேர் பலி,60பேர் படுகாயம்
இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையின் முன்புறமிருந்த அவசர ஊர்திகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 60 பேர் காயமடைந்துள்ளனர். அல்-ஷிபா மருத்துவமனையிலிருந்து அவசர ஊர்திகளின் மூலமாக மோசமான நிலையில் உள்ள நோயாளிகள், ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்து செல்லப்படவிருந்ததாகக் காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ஒட்டுமொத்த உலகத்துக்கும் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். இவை மருத்துவ அவசர ஊர்திகள் தான்” என்று பேசியுள்ளார் காசாவின் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் […]













