இலங்கை

புத்தளத்தில் குழுக்களிடையே துப்பாக்கி சூட்டு சம்பவம் ; மூவர் படுகாயம்!

  • November 12, 2023
  • 0 Comments

மாரவில வடக்கு மூதுகடுவ கடற்கரையில் இன்று (12) குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கடற் பிரதேசத்தில் கரைவலை மீன் வாங்கச் சென்ற சிலருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அங்கு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதன்போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அந்த நபரின் தாய் வெட்டுக்காயங்களுடன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் […]

இலங்கை

இலங்கையில் வீடொன்றின் மீது குண்டுத்தாக்குதல்!

  • November 12, 2023
  • 0 Comments

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான தெமட்டகொட ருவானின் தெமட்டகொட வெலுவான பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் முன் வாயிலில் இரண்டு குண்டுகளும் தோட்டத்தில் ஒரு வெடிகுண்டும் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொட ருவன் புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை

முன்பள்ளி ஆசிரியையிடம் கப்பம் கோரிய கிராம அதிகரிக்கு விளக்கமறியல்!

  • November 12, 2023
  • 0 Comments

முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிராம அதிகாரி எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதாள உலகத் தலைவர் எனக் கூறி ஹோமாகம, சுவபுதுகம பிரதேசத்தில் வசிக்கும் முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய குற்றச்சாட்டின்பேரில், மிரிஹான விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேக […]

ஆசியா

இம்ரான் கான் மனைவியை கைது செய்ய நடவடிக்கைகள் … அதிகரிக்கும் நெருக்கடிகள்!

  • November 12, 2023
  • 0 Comments

சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, கைது அச்சத்துக்கு ஆளாகியிருக்கும் மனைவி பஸ்ரா பிபி-யால் தனிப்பட்ட மற்றும் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரராக உலக சாதனைகள் படைத்தபோது ஒரு பிளேபாயாக வலம் வந்தவர் இம்ரான் கான். இந்தியாவின் ஜீனத் அமன் உட்பட நாடுதோறும் அவருக்கு நெருக்கமான தோழிகள் இருந்தனர். அனைத்து கிசுகிசுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இங்கிலாந்து யூதரான ஜெமீமாவை 1995ல் இம்ரான் மணந்தார். 9 வருடம் நீடித்த இவர்களின் மணவாழ்வில் […]

இலங்கை

சீனியை பதுக்கி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

  • November 12, 2023
  • 0 Comments

சீனியை பதுக்கி வைத்துள்ள அனைத்து களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர்  நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சந்தையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்  அமைச்சர் குறிப்பிட்டார்.

பொழுதுபோக்கு

மாஸ் ஆக்ஷனில் களமிறங்கும் ஜெயம் ரவி – வெளியான சைரன் பட டீசர்

  • November 12, 2023
  • 0 Comments

யம் ரவியின் சைரன் திரைப்பட டீஸர் நேற்று வெளியானது. பிரபல இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இந்த திரைப்படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, இரு வெவ்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள டீசரின்படி ஜெயம் ரவி சிறைச்சாலையில் இருந்து சுமார் 14 ஆண்டுகள் கழித்து […]

இலங்கை

திருகோணமலையில் மிதமான நிலநடுக்கம் பதிவு!

  • November 12, 2023
  • 0 Comments

திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் இன்று (12.11) ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொழுதுபோக்கு

ரசிகர்களுக்கு கெத்தாக வந்து தீபாவளி வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  • November 12, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 170வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைவர் 170 திரைப்படத்தில் திரைப்படப் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வந்தது. இதற்கு இடையில் தற்பொழுது சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு, தனது வீட்டின் முன் கூடிய ரசிகர்களை சந்தித்து தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பான […]

விளையாட்டு

உலகக்கோப்பை காலிறுதிச் சுற்றுக்காக மோதும் அணிகள்!

  • November 12, 2023
  • 0 Comments

2023 ஒருநாள் உலகக் கோப்பையின் காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டம் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. இப்போட்டி வரும் 15ம் திகதி வான்கடே மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. அந்த போட்டிகள் வரும் 16ம் திகதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு

காசாவில் பெரிய மருத்துவமனையில் சேவை நிறுத்தம்… 3 குழந்தைகள் பலி!

  • November 12, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் தொடர் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் தொடர்கிறது. இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள பெரிய அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். […]