யாழில் சக மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் 4 மாணவர்கள் கைது
சகமாணவனின் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நால்வரில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஏனைய மூவரும் இன்று மாலை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். கடந்த புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் நகரில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவனே தாக்கப்பட்டார். அவரது செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் […]













