சர்ச்சைகளுக்கு ஒரே ஒரு போஸ்ட்டில் பதிலடி கொடுத்தார் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 படத்தில் நடித்து வருகிறார்.
அதில் அவர் இராணுவ வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது. சாய் பல்லவி கதாநாயகியாகவும் கமிட்டாகி உள்ளார்.
அந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பாண்டிசேரில் நடக்கிறது.
மேலும் சிவகார்த்திகேயனின் அயலான் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது சிவகார்த்திகேயன் அவரது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அவரது மகன் மற்றும் மகள் இருவரும் நன்றாக வளர்ந்துவிட்டார்களே என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.
மேலும் இசையன்மைப்பாளர் இமான் கொடுத்த பேட்டியால் சிவகார்திகேயன் பெரிய சர்ச்சையில் சிக்கி இருந்தார். அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக SK இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Happy Diwali to all 😊❤️💥✨
-SK & family pic.twitter.com/vEjeCHxRIZ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 12, 2023