ஆசியா

சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பணத்தை வேகமாக வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக தகவல்!

  • November 14, 2023
  • 0 Comments

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, சீனாவில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் வழக்கத்தை விட வேகமாக தங்கள் பணத்தை சீனாவிலிருந்து வெளியே அனுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனப் பொருளாதார வளர்ச்சி பலவீனம், குறைந்த வட்டி விகிதங்கள், அமெரிக்காவுடன் நிலவி வரும் புவிசார் அரசியல் மோதல் போன்றவை இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு குறித்து உலகின் கவனம் குவிந்துள்ளது. ஆனால் தற்போது […]

மத்திய கிழக்கு

ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் : 30இற்கும் மேற்பட்டோர் பலி!

  • November 14, 2023
  • 0 Comments

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட அகதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய காசாவில் பொதுமக்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இஸ்ரேல் தாக்குதல்களால் பாலஸ்தீனத்தில் மருத்துவமனை அமைப்பு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், மருத்துவமனைகள் கல்லறைகளாக மாறியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைப்பிரசவ குழந்தைகள் உட்பட இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் தினமும் 100 […]

ஐரோப்பா

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

  • November 14, 2023
  • 0 Comments

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவரே நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரக் கடிதம் கொடுத்துள்ளார். பிரிட்டன் நாட்டில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை நடத்தி வரும் நிலையில், ரிஷி சுனக் அங்கே பிரதமராக இருந்து வருகிறார். சில வாரங்களில் இரண்டு பிரதமர்கள் ராஜினாமா செய்த நிலையில், இக்கட்டான சூழலில் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்.அப்போது பிரிட்டனில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த நிலையில், அதை தீர்க்க ரிஷி […]

பொழுதுபோக்கு

ஜெயிலரை முந்தி 2023-ல் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம்… லியோ… லியோ… லியோ….

  • November 14, 2023
  • 0 Comments

விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்படம் திரையரங்குகளில் ஒரு மாதத்தை நிறைவு செய்யவுள்ளது. இதற்கிடையில், ‘லியோ’ உலகம் முழுவதும் 612 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, மேலும் விஜய்யின் படம் இப்போது 2023 இல் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக மாறியுள்ளது. பிரபல தென்னிந்திய நடிகரான விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘லியோ’ திரைப்படம் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 19 அன்று வெளியிடப்பட்டது. முதல் நாள் இந்தியத் திரைப்படத்திற்கான சாதனை எண்ணிக்கையுடன் […]

ஐரோப்பா

தேர்தல்களில் AI தொழில்நுட்பத்தின் தலையீடு இருக்குமா? : முக்கிய நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

  • November 14, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றம் இங்கிலாந்தில் அடுத்த பொதுத் தேர்தலின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரிட்டனின் சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) ரஷ்யா போன்ற நாடுகள் வாக்கெடுப்பின் முடிவுகளுடன் தலையிட முற்படக்கூடும் எனக் கூறுகிறது. இந்த சைபர் தாக்குதல்கள் மேற்குலக நாடுகளில் நடைபெறும் முக்கிய தேர்தல்களில் சவாலாக மாறும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. “இங்கிலாந்து பொதுத் தேர்தல்களில் காகித வாக்களிப்பைப் பயன்படுத்துவதால், நமது தேர்தல்களில் தலையிடுவது மிகவும் கடினமாக இருந்தாலும், AI […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • November 14, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், புலம்பெயர்ந்த ஹோட்டல்களில் வசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, அவர்கள் நீண்ட காலம் காத்திருந்ததன் காரணமாக, அவர்களின் புகலிடக் கோரிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்பே பணி அனுமதி வழங்கப்படுவதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் தஞ்சம் கோருவதற்கான ஆரம்ப முடிவுக்காக ஏறக்குறைய 100,000 பேர் ஒரு வருடத்திற்கும் மேலாகக் காத்திருப்பதாக தரவுகள் காட்டுகின்றன. இதற்கிடையே புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் […]

செய்தி

இலங்கையில் அச்சிடப்பட்ட மின்சார பில்களை விநியோகிப்பது நிறுத்தம் : வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்!

  • November 14, 2023
  • 0 Comments

மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ebil.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், 1987 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (sms) அனுப்புவதன் மூலமும் இந்த இ-பில்லிங் சேவையில் பதிவு செய்யலாம். அதற்கு, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL<blank> மின்சாரக் கணக்கு எண்<blank> மின்னஞ்சல் முகவரி என குறுந்தகவலை (SMS) அனுப்ப […]

இலங்கை

இலங்கைக்கு அருகில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  • November 14, 2023
  • 0 Comments

இலங்கையை அண்மித்து 6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென் பகுதியில், கொழும்பிலிருந்து சுமார் 1326 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 12:31 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வட அமெரிக்கா

வீட்டுப் படுக்கை அறையில் இறந்து கிடந்த ட்ரம்பின் சகோதரி!

  • November 14, 2023
  • 0 Comments

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சகோதரி மேரியன் ட்ரம் பேரி(86) காலமானார். நியூயார்கின் புறநகர் பகுதியான மான்ஹாட்டனில் வசித்து வந்த மேரியன் திங்கட் கிழமை காலை தனது வீட்டில், தனது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நியூயார்க் நகர பொலிஸார், அவரது வீட்டிற்கு சென்று பார்த்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் மேரியன் கார்டியக் அரெஸ்ட் […]

ஆசியா

நேபாளத்தில்  TikTok தளத்தை தடை செய்ய தீர்மானம்!

  • November 14, 2023
  • 0 Comments

நேபாளில் டிக்டொக்கை தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. TikTok தளமானது சமூக ஒற்றுமையை பாதிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​இந்தியா உட்பட பல நாடுகளில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், ஐக்கிய ராஜ்ஜிய பாராளுமன்றத்திலும், அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்திலும் டிக்டொக்  தடை செய்யப்பட்டுள்ளது. நேபாளத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரேகா சர்மா கூறுகையில், டிக்டாக் மூலம் வெறுக்கத்தக்க விஷயங்கள் சமூகமயமாக்கப்படுகின்றன.