உலகம்

டெக்சாஸில் கார் மீது மோதி சிறிய ரக விமானம் விபத்து!

  • November 14, 2023
  • 0 Comments

டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டெக்சாஸில் உள்ள ஏரோ கன்ட்ரி விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

முல்லைத்தீவில் சட்டவிரோத கருக்கலைப்பு ; தாய் உட்பட மூவர் கைது

  • November 14, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 வயது சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை (13) முல்லைத்தீவு பொலிஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் தொடரப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து ​பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். இந் நிலையில் சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணமாக இருந்த வளர்ப்பு […]

மத்திய கிழக்கு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 102 ஐ.நா பணியாளர்கள் மரணம் !

  • November 14, 2023
  • 0 Comments

ஐ.நா. நடத்தும் மருத்துவமனைகள், பள்ளிகளை இஸ்ரேல் ராணுவம் நேரடியாக தாக்கியுள்ளதாக ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 102 ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டாங்கிகளுடன் தங்களது வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அங்கு தங்களது தளவாடங்களை அமைத்து அங்கு பணியில் இருப்பவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. ஐ.நா. நடத்தும் மருத்துவமனையில் நடத்தபட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லபட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. பொதுமக்கள் மீது […]

உலகம்

பின்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

பின்லாந்து ரஷ்யாவில் இருந்து தனது எல்லைக் கடவுகளுக்கு வரும் மூன்றாம் நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காண்கிறது. மற்றும் நிலைமையைக் கையாள “நடவடிக்கை எடுக்க” தயாராகி வருகிறது என்று ஃபின்லாந்து உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். “குறுகிய காலத்தில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆவணங்கள் இல்லாத போதிலும் பின்லாந்துக்கு பயணத்தை அனுமதிக்க ரஷ்ய அதிகாரிகள் தங்கள் பணியை மாற்றியுள்ளனர், இது சட்டவிரோத நுழைவு” என்று உள்துறை அமைச்சர் மாரி ரண்டானென் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கையில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

  • November 14, 2023
  • 0 Comments

இலங்கையில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த, ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின், […]

பொழுதுபோக்கு

லியோவுக்குப்பின் பல கோடிகளை கடந்தது த்ரிஷாவின் சம்பளம்… சுடச்சுட வந்த செய்தி

  • November 14, 2023
  • 0 Comments

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 & 2 படங்களுக்குப் பிறகு, எவர்கிரீன் நடிகை த்ரிஷா மீண்டும் நடிப்பில் களமிறங்கியுள்ளார். கடல் போன்ற ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் த்ரிஷாவின் சம்பளம் குறித்த செய்தி வெளியாகி உள்ளது. 40 வயதானாலும் த்ரிஷா மீண்டும் கோலிவுட்டில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியுள்ளார். தளபதி விஜய்-லோகேஷ் கனகராஜின் LEO படத்தின் வெற்றிக்குப் பிறகு, த்ரிஷா, அஜீத் குமாரின் விடா முயற்சி தவிர, உலகநாயகன் கமல்ஹாசனின் Thug Life உட்பட பல திரைப்படங்களில் கையெழுத்திட்டார். […]

ஐரோப்பா

ஐஸ்லாந்தில் எரிமலைகள் வெடிப்பு :வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்ல அனுமதி

நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட ஐஸ்லாந்திய நகரத்தில் வசிப்பவர்கள், உடமைகளைச் சேகரிக்க தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன் மற்றும் வியாழன் என இரு தினங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் 1400 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய நாட்களிலும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டில் அவசரநிலையை அறிவித்துள்ளது வட அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் 33 சீறும் எரிமலைகள் உள்ளன. எரிமலைகள் வெடிப்பதற்கு முன் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது […]

உலகம்

ரஷ்யாவும், சீனாவும் வடகொரியாவுக்கு ஆதரவாக உள்ளன : அமெரிக்கா குற்றச்சாட்டு!

  • November 14, 2023
  • 0 Comments

ரஷ்யாவும்,  சீனாவும் வட கொரியாவிற்கு பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க உதவுகின்றன என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் “முற்றிலும் ஆதாரமற்றவை” என்று கிரெம்ளின் கூறியுள்ளது. முன்னதாக  அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் சியோலில், சீனாவும் ரஷ்யாவும் ஐக்கிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதன் மூலம் வட கொரியாவின் இராணுவத் திறனை விரிவுபடுத்த உதவுவதாகக் கவலை தெரிவித்தார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கிரெம்ளின்,  ரஷ்யா தனது சொந்த நலன்களுக்காக செயல்படுகிறது என்று கூறியது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் […]

பொழுதுபோக்கு

யார கேட்டு ‘டைகர் 3’ போட்டீங்க? சுப்ரமணியத்தின் தியேட்டர் மீது பாயும் நடவடிக்கை

  • November 14, 2023
  • 0 Comments

திருப்பூர் சுப்ரமணியத்திற்கு சொந்தமான சக்தி சினிமாஸ் தியேட்டரில் அதிகாலை காட்சி திரையிடப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பண்டிகை தினங்களிலோ அல்லது பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலோ ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுவதை திரையரங்குகள் கடைபிடித்து வந்தன. அரசின் அனுமதியோடு இந்த 4 மணிகாட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு ஒன்றாக ரிலீஸ் ஆனபோது […]

இலங்கை

உலக சந்தையில் ஸ்ட்ராபெர்ரிக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி : விவசாய அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை

உலக சந்தையில் ஸ்ட்ராபெர்ரிக்கு அதிக தேவை இருப்பதால், ஏற்றுமதிக்காக ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கும் திட்டத்திற்கு விவசாய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு உள்ளூர் முதலீட்டாளர்கள் குழுவினால் முன்மொழியப்பட்ட முன்மொழிவையடுத்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “நமது நாட்டில் பயிரிடப்படும் ஸ்ட்ராபெர்ரிகள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிரிடப்படாததால் இன்னும் குறைந்த தேவையே உள்ளது. ஸ்ட்ராபெரி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இலங்கை 57வது இடத்தில் உள்ளது. ஸ்ட்ராபெரி ஆண்டுதோறும் வேகமாக வளர்ந்து வரும் […]