ஆஸ்திரேலியா உலகம்

மத்திய கிழக்கை சூழ்ந்த போர் மேகம்: உலக நாடுகள் உஷார்!

  • February 28, 2026
  • 0 Comments

ஈரான்மீதான தாக்குதலையடுத்து மத்திய கிழக்கில் உள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன. ஈரான், இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள தமது பிரஜைகளை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஆஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது. வுணிக விமானங்கள் கிடைக்கும்போதே அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி மூடப்படுவதால் ஏற்படக்கூடிய விமானப் போக்குவரத்து இடையூறுகள் குறித்து ஆஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற பாதுகாப்பு சூழல் காரணமாக அத்தியாவசியப் பொருட்களைச் […]

உலகம்

ஈரான் பதிலடி! அவசரநிலை பிரகடனம்!!

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல்மீது பதில் தாக்குதலை ஈரான் ஆரம்பித்துள்ளது. முன்னாயத்த நடவடிக்கையாக இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு ஈரான் ஏவுகணைகளைத் தடுத்து அழித்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க படைதளங்கள்மீதும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகின்றது. எனினும், அங்கிருந்து தமது படைகளை அமெரிக்கா ஏற்கனவே வெளியேற்றியுள்ளது எனவும் கூறப்படுகின்றது. அதேவேளை, தமது நாட்டின் உச்ச தலைவரும், ஜனாதிபதியும் பாதுகாப்பாக உள்ளனர் என ஈரான் தெரிவித்துள்ளது. மேற்படி […]

உலகம்

ஈரானுக்கு முடிவுகட்டப்படும்: ட்ரம்ப் சூளுரை!

  • February 28, 2026
  • 0 Comments

“ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தையும் நிர்மூலமாக்குவோம்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சூளுரைத்துள்ளார். ஈரான்மீது அமெரிக்காவும்,இஸ்ரேலும் கூட்டு தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு சூளுரைத்துள்ளார். ஈரான் ஜனாதிபதி அலுவலகம், உச்சத் தலைவரின் வளாகம், புலனாய்வு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி நிறுவனம் உள்ளிட்டவைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். ஈரான் எப்போதும் அணு […]

அரசியல் இலங்கை செய்தி

ஜே.வி.பியினர் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர்: டில்வின் சில்வா தெரிவிப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

“ஜே.வி.பியினர் JVP இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர். அப்போதைய இந்திய அரசாங்கத்தை மட்டுமே எதிர்த்தோம்.” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலர் டில்வின் சில்வா tilvin silva தெரிவித்தார். இந்திய வியாப்தவாதத்துக்கு எதிராக அன்று செயல்பட்ட ஜே.வி.பி, இன்று அந்நாட்டின் தேவைக்கேற்ப செயல்படுகின்றது என சில எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. ஜே.வி.பி. செயலாளரின் அண்மைய இந்திய விஜயத்தைக்கூட கடுமையாக விமர்சித்துவந்தன. இந்திய விரோத நிலையில் இருந்த உங்கள் கட்சி, தலைகீழாக மாறி, இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருக்கத் தீர்மானித்துள்ளதாக பரவலாகக் கூறப்படுகிறதே என […]

உலகம் முக்கிய செய்திகள்

(BREAKING NEWS) அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது குண்டு மழைப் பொழிந்த இஸ்ரேல்!

  • February 28, 2026
  • 0 Comments

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இஸ்ரேல் சில நிமிடங்களுக்கு முன்பு ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் ஆதரவளித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரானில் மூன்று வெடிப்புகள் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இப்போது இஸ்ரேல் முழுவதும் சிறப்பு மற்றும் நிரந்தர அவசரகால நிலையை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதேநேரம் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் பெயர் […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரிக்காக மொட்டு கட்சி காத்திருப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

“எமது ஆட்சியின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சர்வதேசம்வரை சென்ற பேராயர் தற்போது மௌனம் காப்பது ஏன்? பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க கோரி அவர் வீதியில் இறங்காமல் இருப்பது ஏன்?” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi கேள்வி எழுப்பினார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் நடத்தப்பட்டது என்பதுபோலவே காண்பிப்பதற்கு கடந்த காலங்களில் தகவல் […]

ஐரோப்பா செய்தி

பாரிஸின் சிறந்த பேக்கரி உற்பத்தியாளர் : பரிசை வென்ற ஈழத் தமிழர்!

  • February 28, 2026
  • 0 Comments

பாரிஸில் பேக்கரி தொழிலாளியாக பணியாற்றிவரும் 43 வயதான சித்தம்பரப்பிள்ளை ஜெகதீபன், 2026 ஆம் ஆண்டுக்கான கிராண்ட் பிரிக்ஸை வென்றுள்ளார். இதன்மூலம் அவர் 4000 யூரோ பணப்பரிசையும், ஒரு வருடத்திற்கு எலிசி அரண்மனைக்கு பாண் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். பிரான்ஸில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் சுவை, தரம், நேர்த்தி என்பவற்றை சோதனை செய்யும் இந்த போட்டியில் சுமார் 143 போட்டியாளர்கள் பங்குபற்றினர். சித்தம்பரப்பிள்ளை ஜெகதீபன் 2003 ஆம் ஆண்டு பிரான்சுக்கு சென்ற நிலையில், கடந்த  […]

உலகம்

முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மார்க் கார்னி : உறவை வலுப்படுத்த முயற்சி!

  • February 28, 2026
  • 0 Comments

கனடா பிரதமர் மார்க் கார்னி ( Mark Carney) முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். சமீபகாலமாக சிக்கலாக உள்ள டெல்லியுடனான உறவுகளை மீட்டெடுக்கவும் வர்த்தக ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் கார்னி முயற்சிக்கின்ற நிலையில், இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நான்கு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அவர்,  வணிகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார், மேலும் வரும் திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார். இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, எதிர்கால கூட்டாண்மைக்கான “நேர்மறையான உந்துதலையும் […]

அரசியல் இலங்கை செய்தி

கோட்டாபயவே அடுத்த இலக்கு: விமல் குற்றச்சாட்டு!

  • February 28, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை Gotabaya Rajapaksa கைது செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa குற்றஞ்சாட்டியுள்ளார். ஓர் அங்கமாகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்ட சஹ்ரான் போன்ற ஒருவர், தீவிர சிங்கள பௌத்தராக அறியப்படும் கோட்டாபய […]

விளையாட்டு

வாழ்வா, சாவா? இலங்கையுடன் இன்று மோதுகிறது பாகிஸ்தான்!

  • February 28, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை Sri Lanka மற்றும் பாகிஸ்தான் Pakistan ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்துள்ளது. எனவே, இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கே முக்கியத்துவம் பெறுகின்றது. முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தானுக்கு அரைஇறுதிக்கான கதவு திறந்துள்ளது. எனவே, […]