இலங்கை

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : விசா காலம் நீட்டிப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமை காரணமாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 28, 2026 முதல் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களின் விசா காலம் நிறைவடையலாம். இந்த சூழ்நிலையை நிவர்த்தி செய்வதற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை ஏழு […]

ஐரோப்பா

ஈரான் ஆயுதத் திட்டங்களை கைவிட்டு அமைதிக்கு திரும்ப வேண்டும் – ஸ்டாமர் வலியுறுத்து!

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகள் காரணமாக பிராந்திய தற்காப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பிரித்தானிய விமானங்களை நிலைநிறுத்த உள்ளதாக பிரதமர் ஸ்டாமர் அறிவித்துள்ளார். டவுனிங் தெருவில் இருந்து  நேற்று  கருத்து வெளியிட்ட அவர் இதனை அறிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பிரிட்டன் முன்பு செய்தது போல், சர்வதேச சட்டத்தின்படி, பிரித்தானிய தளங்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உயர் மட்டத்திற்கு அதிகரித்துள்ளோம். பிராந்தியத்தில் உள்ள இங்கிலாந்து நாட்டினரை  அணுகி, அவர்களுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த […]

செய்தி

ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கமேனியின் மகன், மருமகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான்மீதான கூட்டு போர் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் : உலக நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி பாதிப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளன. செயற்கைக்கோள் படங்கள் துறைமுகங்களுக்கு அருகில் கப்பல்கள் குவிந்து கிடப்பதைக் காட்டுகின்றன. ஈரானின் புரட்சிகர காவல்படை ஜலசந்தி வழியாக செல்ல வேண்டாம் என்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருப்பினும் இங்கிலாந்து கடற்படை இந்த உத்தரவுகள் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என்று கூறி எச்சரிக்கையாக […]

உலகம் முக்கிய செய்திகள்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழப்பு!

  • March 1, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவர்  அயதுல்லா அலி கமேனி உயிரிழந்துள்ளதை அந்நாட்டின் அரச தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டிணைந்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உச்சத் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானின் நகர மையத்தில் உள்ள அவரது வளாகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் 40 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

கருத்து & பகுப்பாய்வு

வசந்தத்தை வரவேற்கும் Worm Moon – இரத்த நிலவாக மாறும் அரிய தருணம்

  • February 28, 2026
  • 0 Comments

வசந்த காலத்தின் முதல் முழு நிலவாக அறியப்படும் Worm Moon, எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி பிரித்தானிய வான் பரப்பில் உதயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சில பகுதிகளில், முழு சந்திர கிரகணம் நிகழும்போது இந்த முழு நிலவு தெரியும். இது இரத்த நிலவு என்றும் அழைக்கப்படுகிறது. பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக நகரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது இதனால் சந்திரனின் மேற்பரப்பில் நிழல் விழுகிறது. இதன்போது, ​​சந்திரன் சிவப்பு நிறமாக மாறக்கூடும், […]

விளையாட்டு

அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்

  • February 28, 2026
  • 0 Comments

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (28) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷகிப்சடா பர்ஹான் 100 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 213 என்ற […]

இலங்கை செய்தி

எரிபொருள் விலை அதிகரிப்பு

  • February 28, 2026
  • 0 Comments

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா டீசல் நான்கு ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 281 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 6 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 329 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், ஒரு ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 293 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. எனினும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்தவித […]

இந்தியா செய்தி

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயிகளை அழிக்க கூடியது – ராகுல் காந்தி

  • February 28, 2026
  • 0 Comments

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயிகளை அழிக்க கூடியது என என இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார் பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் நடைபெற்ற மஸ்தூர் கிசான் மகா பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்க ஒப்பந்தம், விவசாயத் துறை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான்கு மாதங்களாக முடங்கி கிடந்த நிலையில் தற்போது பிரதமர் ஏன் 15 நிமிடங்களில் செய்தார் […]

விளையாட்டு

இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றியிலக்கு

  • February 28, 2026
  • 0 Comments

இலங்கை அணி 213 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடவுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (28) பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன. பல்லேகலை இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷகிப்சடா பர்ஹான் 100 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் […]