ICC யின் தலைவரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சஜித் கோரிக்கை!
இலங்கைக்கு வரவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் இன்றைய (27.11) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் கிரெக் பார்க்லே அங்குள்ள 225 எம்.பி.க்களையும் சந்திக்க முடியும் எனவும், இந்த நாட்டில் நிலவும் கிரிக்கெட் பிரச்சனை குறித்து தமக்கு தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் […]













