இந்தியா உலகம் செய்தி

‘வெளிநாட்டு முதலீடுகள் குறிவைப்பு’ – இந்திய நிதி அமைச்சர் அமெரிக்கா, கனடாவுக்கு பயணம்

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை இன்று மேற்கொள்கிறார்.

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை இன்று மேற்கொள்கிறார்.

இருதரப்பு பொருளாதாரம் மற்றும் நிதிப் கூட்டாண்மையை வலுப்படுத்துதல், முதலீட்டுத் தொடர்புகளை ஆழப்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தியே அவரது இவ்விஜயம் அமையவுள்ளது.

தனது டொராண்டோ பயணத்தின் போது, கனடா நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பேனுடன் (François-Philippe Champagne) நடைபெறும் முதலாவது ‘பொருளாதார மற்றும் நிதி உரையாடலில்’ நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

இந்த உரையாடல் மேக்ரோ பொருளாதாரம், நிதித்துறை ஒத்துழைப்பு, இருதரப்பு முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சர்வதேச முன்னுரிமைகள் குறித்து இரு நாடுகளும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் முக்கிய தளமாக அமையும்.

மேலும், முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEOs), தலைவர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகள் பங்கேற்கும் ‘முதலீட்டாளர்கள் வட்டமேஜை மாநாட்டிலும்’ அவர் கலந்து கொள்கிறார்.

டொராண்டோவின் ‘கனடியன் கிளப்’, ‘கனடா-இந்தியா வர்த்தக கவுன்சிலுடன்’ இணைந்து நடத்தும் சிறப்பு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் மற்றும் சாம்பேன் ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இந்தியா-கனடா இருதரப்பு உறவு, முதலீட்டுச் சூழல், உள்நாட்டுப் பொருளாதார முன்னுரிமைகள் மற்றும் இருநாட்டு நிதி உறவுகளின் எதிர்காலப் பாதை குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது.

தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர், சிகாகோ, ஆஷ்வில்லி மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களுக்குச் செல்கிறார்.

சிகாகோவில், முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் தனியார் துறைத் தலைவர்களுடன் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், சிகாகோவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் தனித்தனி சந்திப்புகளையும் நடத்துகிறார்.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள ‘போல்ஸ்கி தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு மையத்திற்கு’ (Polsky Center) செல்லும் அவர், தொழில்முனைவு, தொழில்நுட்ப வணிகமயமாக்கல் மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் சூழல் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார். அத்துடன் சிகாகோ வாழ் இந்தியச் சமூகத்தினரையும் சந்திக்கிறார்.

ஆஷ்வில்லி நகரில், அமெரிக்காவின் தலைமையின்கீழ் நடைபெறும் G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் இந்திய தூதுக்குழுவை நிதியமைச்சர் தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், G-20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் மூத்த பொருளாதார அதிகாரிகள் பங்கேற்று உலகளாவிய பொருளாதார மற்றும் நிதிச் சிக்கல்கள் குறித்து விவாதிக்கின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி