செங்கடலில் ஹவுதி கிளர்சியாளர்களின் டிரோன்கள், ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..!
இஸ்ரேல் ராணுவம்-காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழு இடையிலான போா் கடந்த அக். 7ந் தேதி தொடங்கியதிலிருந்து இந்த விவகாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கும் மற்றொரு அமைப்பு ஹவுதி. செங்கடலில் இஸ்ரேலை நோக்கிப் பயணிக்கும் அல்லது இஸ்ரேலிலிருந்து பயணிக்கும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருவதன் மூலம் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருப்பவர்கள் ஏமனை தலைமையிடமாக கொண்ட இந்த ஹவுதி கிளா்ச்சியாளா்கள். உலகின் பிரதான கிழக்கு-மேற்கு வா்த்தக வழித்தடமாக செங்கடல் அமைந்துள்ளது. இந்தச் செங்கடலில் வா்த்தக கப்பல்கள் மீது ஹவுதி […]













