மத்திய கிழக்கு

காசாவில் 1,500 ஆண்டுகள் பழமையான Byzantine விளக்கை கண்டெடுத்த இஸ்ரேல் வீரர்கள்

காசா மீதான தாக்குதலின் போது இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள் 1,500 ஆண்டுகள் பழமையான பைசண்டைன் விளக்கினை கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை அக்டோபர் 7ம் திகதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதில் இதுவரை 20,00க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹமாஸ் படைகளை எதிர்த்து காசாவில் சண்டையிட்டு வரும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான பைசண்டைன் விளக்கினை (Byzantine lamp )கண்டுபிடித்துள்ளனர்.இந்த 1,500 ஆண்டுகள் பழமையான பைசண்டன் விளக்கை இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் 282வது பீரங்கி படையை சேர்ந்த வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Israeli reserve soldiers 1500 year old byzantine lamp find in gaza,1,500 ஆண்டுகள் பழமையான Byzantine விளக்கு: காசாவில் கண்டெடுத்த இஸ்ரேலிய வீரர்கள்

 

விளக்கின் பழமையை உணர்ந்து கொண்ட வீரர்கள் அதனை உடனடியாக நிபுணர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்து, இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தின் ஆராய்ச்சியாளர் சாரா தாலிடம் ஒப்படைத்துள்ளனர்.

இஸ்ரேலிய சட்டத்தின் படி, எந்தவொரு நபரும் ஏதேனும் தொல்பொருளை கண்டுபிடித்தால், அதனை 15 நாட்களுக்குள் இஸ்ரேலிய தொல்பொருள் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content