இலங்கை

யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள அதிபர்கள்!

  • December 27, 2023
  • 0 Comments

புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மை கஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். புதிதாக நியமனம் பெற்றுள்ள அதிபர்களாகிய தமக்கு புள்ளியிடல் முறைமையின் கீழ் அதிகஷ்ட பிரதேசங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாம் ஆசிரியர்களாக பல ஆண்டுகள் அதிகஷ்ட பிரதேசங்களில் சேவையாற்றி வந்துள்ளோம். தற்போது போட்டி பரீட்சையில் தோற்றி, அதிபர்களாக நியமனம் பெற்றுள்ளோம். அவ்வாறு நியமனம் பெற்ற எம்மை […]

ஐரோப்பா

சைபர் தாக்குதலால் முடக்கிய அல்பேனிய பாராளுமன்றம்

அல்பேனியாவின் பாராளுமன்றம் செவ்வாயன்று அதன் தரவுகளில் நுழைந்து அவற்றை அழிக்க முயற்சிக்கும் ஹேக்கர்கள் மூலம் சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக அறிவித்தது, இதனால் அதன் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஹோம்லேண்ட் ஜஸ்டிஸ் எனப்படும் ஈரானைச் சேர்ந்த ஹேக்கர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சைபர் தாக்குதல், செல்போன் வழங்குநர் மற்றும் விமான நிறுவனத்தையும் குறிவைத்தது. தாக்குதல் என்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் கண்டறிய வல்லுநர்கள் பணியாற்றி வருகின்றனர். பின்னர் சேவைகள் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தினை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி போராட்டம்!

  • December 27, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தினை இடைநிறுத்துமாறு வலியுறுத்தியும் புதிய பிரதி விவசாய பணிப்பாளரின் நியமனத்தினை நிறுத்துமாறு வலியுறுத்தியும் இன்று (27.12)  விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்துறையில் தங்களது தேவைப்பாடுகளை சிறப்பான முறையில் தற்போதைய பிரதி விவசாயப்பணிப்பாளர் பேரின்பராஜா பூர்த்திசெய்துவந்துள்ளதுடன் தங்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் செய்துவருவதாகவும் புதிய […]

இலங்கை

”தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும்” தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தல்

தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. இந்த தேர்தலை பகிஸ்கரிப்பதுதான. அதனையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து […]

இலங்கை

முல்லைத்தீவில் காணியொன்றில் இருந்த துப்பாக்கி ரவைகள் மீட்பு!

  • December 27, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4500 இன்றையதினம் (27.12) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த காணி உரிமையாளர் காணியில் மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது துப்பாக்கி ரவை பெட்டிகள் இருந்ததனை அவதானித்துள்ளார். அதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த சம்பவ இடத்திற்கு வருகைதந்து குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர். T-56 வகை துப்பாக்கி […]

இலங்கை

மட்டக்களப்பு வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதால் 15 வீடுகள் சேதம்

  • December 27, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் 15வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வீட்டிலிருந்தவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கில் நேற்று முதல் சீரற்ற காலநிலை நிலவும் காரணமாக நேற்று முதல் கடும் காற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைபெய்துவருகின்றது.இன்று காலை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் பல வீடுகள் சேதமமைடந்துள்ளன. இந்த சூறாவளி காரணமாக பயன்தரு மரங்களும் விழுந்துள்ளதுடன் சில இடங்களில் வீதிகளிலும் மரங்கள் முறிந்துவீழ்ந்துள்ளதனால் போக்குவரத்துச்செய்வதில் மக்கள் சிரமங்களை […]

பொழுதுபோக்கு

நியூயார்க்கில் இளம் பெண்ணுடன் சுற்றிய விஷால் : முகத்தை மூடிக் கொண்டு ஓடிய பரிதாபம்

  • December 27, 2023
  • 0 Comments

நடிகர் விஷால் ஒரு பக்கம் நடிகர் சங்க பொறுப்புகள், இன்னொரு பக்கம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பு என பிசியாக இருந்து வருகிறார். அவரைப் போன்று பேச்சிலராக இருந்த அவரது நண்பர்கள் அனைவரும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நிலையில் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்துவிட்டு, அதில் இடம்பெற உள்ள திருமண மண்டபத்தில் தான் தனது திருமணம் நடைபெறும் என்று உறுதியாக கூறி வருகிறார் விஷால். இடையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி துரதிர்ஷ்டவசமாக […]

இந்தியா

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: இஸ்ரேலியர்களுக்கு அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

  • December 27, 2023
  • 0 Comments

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் இஸ்ரேலியர்களுக்கு அந்நாட்டு அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. டெல்லி சாணக்கியபுரி பகுதியில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் அமைந்துள்ளது. இந்த இடத்தின் அருகே நேற்று மாலை குண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. மேலும் சம்பவ இடத்திலிருந்து விஷமிகள் எழுதிய கடிதம் ஒன்றையும் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவம் இஸ்ரேல் தூதரகம் மீது குறி வைக்கப்பட்டதாக இருக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. […]

இலங்கை

யாழில் டெங்கு காய்ச்சலால் இளைஞன் மரணம்

யாழில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் இன்று(27) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் என்ற 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் ,அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , மூளை சாவடைந்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்று(27) காலை […]

ஐரோப்பா

பிரித்தானியாவிற்கு சென்றுக் கொண்டிருந்த விமானம் தனது பயணத்தை இடைநிறுத்தியது!

  • December 27, 2023
  • 0 Comments

பார்படாஸிலிருந்து மான்செஸ்டருக்குப் புறப்பட்டுச் சென்ற ஒரு குரூஸ் சார்ட்டர் விமானம் சீரற்ற வானிலை காரணமாக பெர்முடாவுக்குத் திருப்பிவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 225 பயணிகளுடன் கரீபியன் தீவிற்கு பயணித்த குறித்த விமானமானது தற்போது பெர்முடாவில் மூன்று நாட்கள் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் இங்கிலாந்திற்கு திரும்பிக்கொண்டிருந்த பயணிகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது. Maleth Aero Flight 1975 பார்படாஸில் இருந்து புறப்பட்டு டிசம்பர் 24 அன்று மான்செஸ்டரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விமானம் 38,000 அடி உயரத்தில் […]