இலங்கை

யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள அதிபர்கள்!

புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மை கஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள அதிபர்களாகிய தமக்கு புள்ளியிடல் முறைமையின் கீழ் அதிகஷ்ட பிரதேசங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாம் ஆசிரியர்களாக பல ஆண்டுகள் அதிகஷ்ட பிரதேசங்களில் சேவையாற்றி வந்துள்ளோம். தற்போது போட்டி பரீட்சையில் தோற்றி, அதிபர்களாக நியமனம் பெற்றுள்ளோம்.

அவ்வாறு நியமனம் பெற்ற எம்மை மீள அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு அதிபராக நியமித்துள்ளமையால், எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிகஷ்ட பிரதேசத்தில் ஆசிரியர்களாக சேவையாற்றிய எம்மை மீள அதிகஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்க வேண்டாம் என கோரியுள்ளனர்

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்