தரையிறங்கும் போது விமானத்தை நிலைகுலைய வைத்த புயல்… திகிலடைந்த பயணிகள்!(வீடியோ)
ஜெர்ரிட்’ புயல் காரணமாக பலத்த சூறைக்காற்று வீசியபோது லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது தடுமாறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனில் கடந்த சில நாள்களாக ‘ஜெர்ரிட்’ புயல் காரணமாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக லண்டனில் ‘ஜெர்ரிட்’ புயலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது. […]













