பொழுதுபோக்கு

அயோத்தி குடமுழுக்கு விழா: முதல் ஆளாக வந்த நடிகர் ரஜினிகாந்த்!

  • January 22, 2024
  • 0 Comments

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவைக் காண முதல் ஆளாக நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வருகிறார். பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழிக்கும் அவர் உணவாக பழங்களை மட்டுமே எடுத்து கொண்டதோடு, இளநீர் பருகினார். மேலும் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்கினார். நாடு முழுவதும் உள்ள ராமாயணம் தொடர்புடைய இடங்களுக்குச் […]

ஆசியா

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த 47 பேர்- மீட்புப்பணிகள் தீவிரம்!

  • January 22, 2024
  • 0 Comments

சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷூய்குன் கிராமம் உள்ளது . இந்த கிராமத்தில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். கடந்த சில நாட்களாக இந்த […]

இலங்கை

இலங்கையில் சுகாதாரத்துறையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டம்!

  • January 22, 2024
  • 0 Comments

சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதன்படி, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “செயற்கை நுண்ணறிவு இப்போது நிஜமாகிவிட்டது. அதை புறக்கணிக்க முடியாது. மேலும், செயற்கை நுண்ணறிவால் சுகாதாரத் துறைக்கும் மருத்துவக் கல்விக்கும் பல நன்மைகள் உள்ளன. இது புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல.  மருத்துவத்தின் தரத்தை […]

பொழுதுபோக்கு

அயோத்தி ராமருக்கு கோடியில் நன்கொடை வழங்கிய ஹனுமான்

  • January 22, 2024
  • 0 Comments

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான படம் ‘ஹனு-மான்’. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் […]

இந்தியா

இந்திய எல்லைக்குள் நுழைந்த 277 மியான்மர் வீரர்களை திருப்பி அனுப்ப இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை

  • January 22, 2024
  • 0 Comments

மிசோரம் மாநிலத்துக்குள் நுழைந்த மியான்மர் ராணுவ வீரர்கள் 277 பேர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான மிசோரம் அண்டை நாடான மியான்மருடன் 510 கி.மீ. தொலைவு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில், இந்திய எல்லையோர ராணுவ முகாம்களில் கிளர்ச்சி படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். அந்த தாக்குதலில் இருந்து தப்புவதற்காக, மியான்மர் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைகின்றனர். இவ்வாறு […]

பொழுதுபோக்கு

குட்டி போடும் ஆண் கடல் குதிரை பற்றி உங்களுக்கு தெரியுமா? வைரலாகும் அரிய வீடியோ

  • January 22, 2024
  • 0 Comments

கடற்குதிரைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் கடல்வாழ் உயிரினங்களில், கடற்குதிரை மட்டுமே ஆண் உயிரினம் குழந்தைகளை பெற்றெடுக்கிறது. பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (சுமார் 200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ 1 செ.மீ இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே […]

இலங்கை

இலங்கையில் மரக்கறிகளின் விலையில் பாரிய மாற்றம்!

  • January 22, 2024
  • 0 Comments

இலங்கையில் மரக்கறிகளின் விலை 05 நாட்களில் 40% குறைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்ய மறுத்து மாற்று வழிகளில் ஈடுபடுவதனால் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக சந்தையில் 2,500 ரூபாவாக உயர்ந்திருந்த ஒரு கிலோ கேரட்டின் சில்லறை விலை இன்று 900 ரூபாவாக குறைந்துள்ளது. மேலும், முட்டைகோஸ், […]

விளையாட்டு

ஐபிஎல்லில் விளையாடவே முடியாத சிஎஸ்கே வீரர்

  • January 22, 2024
  • 0 Comments

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) இடையே 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இறுதிப் போட்டிக்கு பிறகு அம்பத்தி ராயுடு இந்திய கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்வதற்கு அம்பதி ராயுடு உதவினார்.  எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த வெற்றியின் மூலம் ராயுடு ஐபிஎல் வரலாற்றில் 6 முறை கோப்பையை […]

இலங்கை

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு – அரசியல் கட்சி தலைவரும் பலி

  • January 22, 2024
  • 0 Comments

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அவர்களில், ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதாள உலக குழுக்களுக்கு இடையில் நிலவிய நீண்டகால பகையே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக […]

வாழ்வியல்

கரட்டை பச்சையாக சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • January 22, 2024
  • 0 Comments

கரட் ஹல்வா திருமணங்கள் மற்றும் விருந்துகளில் பொதுவாக வைக்கப்படும் ஒரு இனிப்பு வகை ஆகும். ஆனால் அதை அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரை அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கேரட் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறங்களில் உள்ளது. தரையில் விளையும் இந்த காய்கறியை பச்சையாக சாப்பிட்டால், அது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது சருமத்தை பளபளப்பாகவும், […]