இலங்கை

இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • January 22, 2024
  • 0 Comments

இலங்கையில் இந்த நேரத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடு இக்கட்டான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மாறாக நன்மையை ஏற்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

திருகோணமலையில் யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

  • January 21, 2024
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா- வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மொட்டை காட்டுப்பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செம்பி மொட்டை அரசுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர் ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முகமட் யாகூப் (68வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட காட்டுப் பகுதிக்குள் சென்று மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானை தாக்கி விழுந்து கிடந்த […]

இலங்கை செய்தி

வற் வரி இல்லாத் பொருட்களை விற்பனை செய்ய விசேட கடைகளை ஆரம்பிக்க அமைச்சர் திட்டம்

  • January 21, 2024
  • 0 Comments

வற் இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்ச்சித் தொடரில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தமது அமைச்சின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் இயங்கக்கூடிய பல இடங்கள் உள்ளதால், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை […]

இலங்கை செய்தி

ஸ்ரீ பாத மலைக்கு யாத்திரை சென்ற அமெரிக்க தூதுவர்

  • January 21, 2024
  • 0 Comments

புனித யாத்திரைகள் மற்றும் சாகசங்களை விரும்பும் மக்களுடன் தான் அண்மையில் ஸ்ரீ பாதஸ்தானத்திற்கு விஜயம் செய்ததாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார். ஸ்ரீ பாத மலையின் இயற்கை அழகையும், வரலாற்று முக்கியத்துவத்தையும், அனைத்து மதத்தினரும் ஸ்ரீ பாதத்தின் மீது காட்டும் மரியாதையை மனதில் கொண்டு, ஸ்ரீ பாத மலையில் ஏறியதாகவும், ஸ்ரீ பாத மலையில் ஏறுவது சவாலானதாகவும், ஆனால் சூரிய ஒளியைக் கண்டு அந்த சவாலை முறியடித்ததாகவும் கூறினார். ஸ்ரீ பாத மலையேற்றத்தின் சிறந்த […]

உலகம் செய்தி

நியூசிலாந்தில் திருட்டில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா

  • January 21, 2024
  • 0 Comments

நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 42 வயதான கோல்ரிஸ் கஹ்ராமன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பசுமைக் கட்சியின் உறுப்பினர் ஆவார். ஈரானியப் பெண்ணான இவர், 2017ஆம் ஆண்டு அகதி விசா மூலம் நியூசிலாந்துக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினரான முதல் பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு துணி வியாபாரம் சம்பந்தமாக பல […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு எதிராக வீட்டோ அதிகாரம்

  • January 21, 2024
  • 0 Comments

நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் முயற்சித்தால், அந்த முயற்சியை வீட்டோ பயன்படுத்தி தடுக்கும் என ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உறுப்பினராகும் வாய்ப்பை உக்ரைனுக்கு வழங்குவது மூன்றாம் உலகப் போரைத் தொடங்குவதற்கான அறிகுறி என்றும் பிரதமர் கூறினார். உக்ரைன் நேட்டோவில் உறுப்பினரானால் ரஷ்யாவுடன் நேட்டோ போர் தொடுக்க நேரிடும் என்று பிரதமர் ஃபிகோ கூறினார்.மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நேட்டோ நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். உக்ரைன் விஜயத்திற்கு முன்னதாக நேற்று (20) […]

இலங்கை செய்தி

மாவீரர்களிடம் கார்த்தினை மலர் வைத்து தரிசனம் பெற்றார் சிறிதரன் எம்.பி

  • January 21, 2024
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரன், கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பாக அவருக்கு வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக இன்று காலை திருகோணமலையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருந்தனர். இதில் சக போட்டியாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தோற்கடித்து சிறிதரன் வெற்றிபெற்றிருந்தார். இந்த வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, சிறிதரன் […]

இலங்கை செய்தி

கிணற்றில் தள்ளி கொல்லப்பட்ட 10 வயது சிறுமி

  • January 21, 2024
  • 0 Comments

சிறுமி ஒருவர் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள நோன்ரா கிராமத்தில் பதிவாகியுள்ளது. 10 வயது சிறுமி கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நேற்று (20ம் திகதி) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், சிறுமியை பிரதேசவாசிகள் கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரியா என்ற 10 வயது […]

இலங்கை செய்தி

யாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞன் உயிரிழப்பு

  • January 21, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம், சாவகச்சேரி போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்ட இளைஞனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையின் போது, இளைஞன் ஹெரோயினுக்கு அடிமையானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நேற்று (20) குறித்த இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த ஏனைய இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். […]

உலகம் செய்தி

ஈரான் அதிபரிடம் இருந்து இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை

  • January 21, 2024
  • 0 Comments

சிரியாவின் டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானிய புரட்சிப் படையின் மூத்த உறுப்பினர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும், இதில் சிரிய இராணுவத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாகவும் கூறினார். எனவே, அந்த தாக்குதலுக்கு ஈரானுக்கு பதில் அளிக்கப்படும் என்று ஈரான் அதிபர் கூறினார். இது தொடர்பான தாக்குதலுக்கு இஸ்ரேல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஈரான் அதிபர் வலியுறுத்தியுள்ளார். […]